Connect with us

டிடி எஃப் வாசனுக்கு மட்டும் ஏன் எப்போதும் ஆப்பு.. இர்பானுக்கு மட்டும் சலுகை.. பின்னால் இருக்கும் பெரும்புள்ளி..!

irfan ttf

News

டிடி எஃப் வாசனுக்கு மட்டும் ஏன் எப்போதும் ஆப்பு.. இர்பானுக்கு மட்டும் சலுகை.. பின்னால் இருக்கும் பெரும்புள்ளி..!

Social Media Bar

யூட்யூப் என்பது தற்சமயம் தவிர்க்க முடியாத முக்கியமான சமூக வலைத்தளமாக மாறியது. மக்களை நேரடியாக தொடர்புக்கொள்வதற்கு உதவக்கூடிய ஒரு விஷயமாக யூ ட்யூப் இருந்து வருகிறது. அதே சமயம் திரை பிரபலங்களை போலவே யூ ட்யூப் பிரபலங்களும் அதிக சர்ச்சைக்கு உள்ளாகும் சம்பவங்களும் நடக்கின்றன.

உதாரணமாக கூற வேண்டும் என்றால் யூ ட்யூப்பர் டி.டி.எஃப் வாசனை கூறலாம். பிரபல பைக் ரைடரான டி.டி.எஃப் வாசன் 2கே இளைஞர்களின் ஹீரோ என்றே கூறலாம். அந்த அளவிற்கு இவர் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்.

டி.டி.எஃப்பிற்கு வரவேற்பு:

தொடர்ந்து பைக் ரேஸ் குறித்து வீடியோக்களை பதிவிட்டு வருவதை வேலையாக கொண்டிருந்தார் டி.டி.எஃப் வாசன். ஆனால் அவர் செய்யும் வித்தைகள் எல்லாம் சட்ட அத்துமீறல் என கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க துவங்கினர்.

இந்த நிலையில் டி.டி.எஃப் வாசன் அதற்கு மன்னிப்பு கேட்டிருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும். ஆனால் அவர் பத்திரிக்கைகள் குறித்தும் காவலர்கள் குறித்தும் எதிர்மறையான கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.

இதனால் பத்திரிக்கையாளர் மற்றும் காவலர்கள் டி.டி.எஃப் வாசனுக்கு எதிராக மாறினர். தொடர்ந்து இதனால் டி.டி.எஃப் வாசனுக்கு எதிராக ஏதாவது ஒன்றை செய்துகொண்டே இருக்கின்றனர். சமீபத்தில் கூட அவரது கடை வாசல் பொது இடம் வரை வந்துள்ளது என கூறி அதை இடித்துள்ளனர்.

இர்ஃபான் வீவ்:

அதே சமயம் யூ ட்யூப்பர் இர்ஃபான் ஏற்கனவே கார் விபத்து குற்றத்தில் சிக்கினார். அதே போல சமீபத்தில் கூட அவரது குழந்தை ஆணா பெண்ணா என அறியும் வீடியோ போட்டு சிக்கலில் சிக்கினார். ஆனால் இதுவரை அரசு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்கிற கேள்வி பலருக்கும் எழுகிறது.

ஆனால் இர்ஃபானுக்கு அரசியல் பிரமுகருடன் நேரடி தொடர்பு இருப்பதாகவும் அதனால்தான் டி.டி.எஃப் வாசன் மாதிரி அவருக்கு எந்த இடர்பாடுகளும் வருவதில்லை என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் உள்ளன.

To Top