நானும் உதயநிதியும் பொண்ணுங்க ஸ்கூல் பக்கம்தான் நிப்போம்!.. ஓப்பனாக கூறிய விஷால்!..

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் விஷாலும் முக்கியமானவர். செல்லமே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான விஷால் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்சமயம் அவர் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் விஷாலுக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் கம் பேக்காக இந்த திரைப்படம் அமைந்துள்ளது. உதயநிதியும் நடிகர் விஷாலும் சிறு வயது முதலே நண்பர்களாக இருந்தவர்கள். ஒரு மேடையில் அவர்கள் இருவரும் பேசும் பொழுது அவர்களது இளமைக்கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்கள்.

பள்ளி முதல் கல்லூரி வரை இவர்கள் இருவரும் சேர்ந்துதான் படித்திருக்கிறார்கள். ஆனால் இந்த விஷயம் அவர்கள் பேட்டியில் கூறும் வரை பெரிதாக யாருக்கும் தெரியவில்லை. பள்ளி காலங்களில் பல பள்ளிகளில் இருந்து வந்து விழாக்கள் நடக்கும்.

அதை இண்டர் ஸ்கூல் காம்படேஷன் என்பார்கள். அந்த விழா முடிந்த பிறகு அதில் எடுத்த புகைப்படங்களை கொடுப்பதற்காக உதயநிதியும் விஷாலும் சேர்ந்து பெண்கள் பள்ளிகள் எல்லாவற்றிற்கும் செல்வார்கள் என்பதை நகைச்சுவையாக வெளிப்படுத்தி இருந்தார் விஷால். பள்ளிக்காலங்களிலேயே அப்படி இருந்திருக்கிறார்கள் என்று அவர்களை கிண்டல் அடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.