Connect with us

தயாரிப்பாளர் சங்கமும் அரசியல் சார்ந்துதான் இருக்கு!.. லிங்குசாமிக்கு கமல் படத்தில் நீதி கிடைக்குமா!.. பத்திரிக்கையாளர் சொன்ன தகவல்!.

kamalhaasan lingusamy

News

தயாரிப்பாளர் சங்கமும் அரசியல் சார்ந்துதான் இருக்கு!.. லிங்குசாமிக்கு கமல் படத்தில் நீதி கிடைக்குமா!.. பத்திரிக்கையாளர் சொன்ன தகவல்!.

Social Media Bar

கமல்ஹாசன் நடித்து தோல்வியை கண்ட திரைப்படங்களில் உத்தம வில்லன் திரைப்படமும் முக்கியமான திரைப்படமாகும். உத்தம வில்லன் திரைப்படத்தை பொறுத்தவரை இயக்குனர் லிங்குசாமிதான் அந்த திரைப்படத்தை தயாரித்தார்.

ஆனால் படம் துவங்கியப்போது முற்றிலும் கமர்ஷியலான ஒரு கதையாக உத்தமவில்லன் திரைப்படத்தின் கதை இருந்தது. ஆனால் கமல் நடிக்க துவங்கியப்போது அதன் மொத்த கதையையும் மாற்றினார். அதில் லிங்குசாமி சில குறைகளை சரி செய்ய சொல்லியும் கூட கமல் அதை செய்யவில்லை.

இதனால் அந்த படம் தோல்வியுற்றது. இதனை லிங்குசாமியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்த படத்தின் தோல்வியை தொடர்ந்து லிங்குசாமி தயாரிப்பில் அடுத்து ஒரு படத்தில் நடிப்பதாக வாக்கு கொடுத்தாராம் கமல்ஹாசன். ஆனால் 8 ஆண்டுகள் ஆன பிறகும் கூட அவர் எந்த படத்திலும் நடித்து கொடுக்கவில்லை.

lingusamy-1
lingusamy-1

இதனால் தயாரிப்பாளர் சங்கத்தை நாடி உதவி கேட்டுள்ளார் லிங்குசாமி. நேற்று இதற்காக கூட்டம் நடத்தப்பட இருந்த நிலையில் கடைசி நேரத்தில் முக்கிய நிர்வாகிகள் யாரும் வரவில்லையாம்.

இதுக்குறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறும்போது அரசியல் செல்வாக்கு கமலுக்கு அதிகமாக இருப்பதாலும் ,ரெட் ஜெயண்ட் மாதிரியான பெரும் நிறுவனங்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதாலும் தயாரிப்பு சங்கங்கள் தப்பிக்கவே முயற்சி செய்கின்றன என்கிறார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top