Cinema History
Poet Vaali : பாடல் வரிகள் எழுதும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.. இல்லன்னா வாழ்க்கையை காவு வாங்கிடும்… அறிவுரை சொன்ன வாலி!..
தமிழ் சினிமாவில் கவிஞர் கண்ணதாசனுக்கு பிறகு மக்களால் பெரும் கவிஞராக அறியப்படுபவர் கவிஞர் வாலி. கருப்பு வெள்ளை சினிமாவில் துவங்கி இப்போது உள்ள சினிமா வரை அனைத்து காலங்களுக்கும் தகுந்தார் போல பல பாடல்கள் எழுதி கொடுத்து இருக்கிறார்.
காலத்திற்கு தகுந்தார் போல மாற்றத்தை கொண்டு வருபவர் வாலி. அதனால்தான் அவரால் எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்கும் பாடல் வரிகள் எழுத முடித்தது. அஜித் விஜய் திரைப்படங்களுக்கும் பாடல் வரிகள் எழுத முடிந்தது.
சென்டிமென்டாக சில விஷயங்கள் மீது பிரபலங்கள் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். அப்படி வாலிக்கும் சில விஷயங்களில் நம்பிக்கை உண்டு. அதாவது தமிழில் மிகவும் அபத்தமான வார்த்தைகளை பாடல்களில் பயன்படுத்தக் கூடாது.
அது நமது வாழ்க்கையிலேயே பிரச்சனையை ஏற்படுத்திவிடும் என்று ஒரு நம்பிக்கை வாலிக்கு உண்டு. இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் போது பாடல் வரிகள் எழுதுவதில் நான் மிகவும் மதிக்கும் இன்னொரு நபர் மருதகாசி. மருதகாசி ஒரு படத்திற்கு சோக பாடல் ஒன்றை எழுதும் பொழுது அதில் நிறைய அவச்சொற்களை பயன்படுத்தியிருந்தார்.
அதற்குப் பிறகு அந்த பாடல் வரிகள் அவரது வாழ்க்கையிலேயே பாதிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து பிரச்சனைகளை காண துவங்கினார் மருதகாசி எனவேதான் நான் சோகப்பாடல்கள் எழுதினாலும் கூட அதில் தீய சொற்களை அதிகமாக பயன்படுத்த மாட்டேன் என்று கூறியிருக்கிறார் வாலி.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்