Connect with us

கங்கை அமரனை நான் வேணும்னே நிராகரிக்கல!.. வாலி கங்கை அமரனை நிராகரிக்க இதுதான் காரணம்!..

vaali kangai amaran

Cinema History

கங்கை அமரனை நான் வேணும்னே நிராகரிக்கல!.. வாலி கங்கை அமரனை நிராகரிக்க இதுதான் காரணம்!..

Social Media Bar

Gangai Amaran and vaali : கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டவர் கவிஞர் வாலி. கவிஞர் வாலி தமிழ் சினிமாவில் பெரிதாக வளர்ந்த பிறகு அவரிடம் வாய்ப்பு தேடி கடிதம் எழுதியவர்கள் எக்கச்சக்கமானவர்கள்.

அதில் அனைவருக்கும் வாலியால் வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. அதில் தொடர்ந்து வாலிக்கு கடிதம் எழுதி வந்தவர்களில் முக்கியமானவர் இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன். இளையராஜாவின் தம்பியான கங்கை அமரனுக்கு முதலில் பாடல் வரிகளை எழுதுவதில் தான் ஆசை அதிகமாக இருந்தது.

எனவே பாடல் ஆசிரியராக வேண்டும் என்கிற ஆசையில் வாலிக்கு உதவியாளராக சேர அவருக்கு கடிதம் எழுதி வந்தார். ஆனாலும் வாலி அவரை சேர்த்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் பிறகு சினிமாவிற்கு வந்து பாடல் ஆசிரியர் இயக்குனர் இசையமைப்பாளர் என்று பன்முக திறமைகளை வளர்த்துக் கொண்டார் கங்கை அமரன்.

gangai-amaren
gangai-amaren

இது குறித்து வாலி ஒரு பேட்டியில் கூறும்பொழுது என்னிடம் கடிதம் எழுதி வாய்ப்பு கிடைக்காமல் தமிழ் சினிமாவில் பெரிதானவர்களில் முதலாமானவர் கங்கை அமரன். இரண்டாவது நபர் ராம நாராயணன் ராமநாராயணன் ஒரு தையல் கடை வைத்து நடத்தி வந்தவர்.

அவர் என்னிடம் வாய்ப்பு கேட்ட பொழுது நான் வழங்கவில்லை. பிறகு அவர் தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய இயக்குனர் ஆனார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இவர்கள் அனைவருக்கும் நான் வேண்டுமென்றே வாய்ப்பை நிராகரிக்கவில்லை. அந்த சமயத்தில் எனக்கு போதுமான அளவிலான உதவியாளர்கள் இருந்தனர்.

எனவே தான் நான் புதிதாக யாரையும் சேர்த்துக் கொள்ளவில்லை என்று விளக்கம் கொடுத்து இருக்கிறார் வாலி.

To Top