Cinema History
அந்த படத்துக்கு நான்தான் பாட்டு எழுத வேண்டியது!.. நானே மண்ணள்ளி போட்டுக்கிட்டேன் வெளிப்படையாக கூறிய வாலி…
தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் முக்கியமானவர் கவிஞர் வாலி. கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பல காலங்கள் தொடர்ந்து பாடல் வரிகளை எழுதி வந்தவர் வாலி. இசையும் சினிமாவும் அடுத்த தலைமுறைகளுக்கு ஏற்றாற் போல மாறிக்கொண்டே வந்தப்போதும் அதற்கு தகுந்தாற் போல தன்னை மாற்றிக்கொண்டு பாடல் எழுதியவர் கவிஞர் வாலி.
இயக்குனர் சங்கர் இயக்கிய பல படங்களுக்கு கவிஞர் வாலிதான் பாடல் வரிகள் எழுதினார். ஷங்கர் இயக்கிய முதல் படமான ஜெண்டில்மேன் திரைப்படத்திற்கும் வாலிதான் பாடல் வரிகள் எழுதவிருந்தார். போஸ்டர்களிலும் வாலி பெயரே இடம் பெற்றது.
அப்போது சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு என்கிற பாடலை வாலி எழுதி கொடுத்தார். ஆனால் ஷங்கருக்கு அது ஏற்புடையதாக இல்லை. எனவே இன்னொரு பாடல் வரியும் எழுதி வாங்கினார். ஆனால் பாடல் ரெக்கார்டு செய்யும்போது சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயில் பாடலையே ரெக்கார்டு செய்தார்.
இதனால் கடுப்பானார் வாலி. இந்த பாடல் உனக்கு பிடிக்கவில்லை என கூறிவிட்டு இப்போது இதையே வைத்திருக்கிறாய் என ஷங்கரிடம் கோபித்துக்கொண்டு படப்பிடிப்பை விட்டு சென்றுவிட்டார். இதை அவரே தனது பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
