Cinema History
நேரம் இல்லாமல் கிளம்பிய கண்ணதாசன்!.. கேப்பில் புகுந்து கிடா வெட்டிய வாலி!.. என்ன மனுசன்யா!.
Tamil Poet Kannadasan and vaali : தமிழில் பாடலாசிரியர்கள் என்று சொன்னாலே பலருக்கும் நினைவு வரும் பெயர் கண்ணதாசன், வாலி, வைரமுத்துவாகதான் இருக்கும். கண்ணதாசனுக்கு பிறகு அவருக்கு நிகரான ஒரு பாடலாசிரியராக, கவிஞராக வந்தவர் வாலி.
எம்.ஜி.ஆர் சிவாஜி காலக்கட்டத்தில் துவங்கி வரிசையாக பல பாடல் வரிகளை எழுதியுள்ளார் வாலி. அப்படி அவர் எழுதிய பாடல் வரிகள் பலவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. முக்கியமாக எம்.ஜி.ஆருக்கு பிடித்த ஒரு நபராக வாலி இருந்தார்.
வாலி சினிமாவிற்கு அறிமுகமான பிறகும் கூட பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் எப்படியாவது பணிப்புரிய வேண்டும் என்கிற ஆசையில் இருந்தார். அவருக்கு அதற்கான வாய்ப்பு மட்டும் கிடைக்கவே இல்லை. முக்கியமாக ஏ.வி.எம் நிறுவனத்திடம் வாய்ப்பை பெற வேண்டும். அதன் மூலம் சீக்கிரம் வளர்ந்துவிடலாம் என நினைத்தார் வாலி.
ஆனால் ஏ.வி.எம் நிறுவனத்தை பொறுத்தவரை அது தொடர்ந்து கண்ணதாசனை வைத்துதான் பாடல் வரிகளை எழுதி வந்தது. இதனால் வாலிக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் நாகேஷ் நடிப்பில் இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சர்வர் சுந்தரம் திரைப்படம் அப்போது தயாராகி வந்தது.
அதில் ஒரு பாடலுக்கு மட்டும் வரிகளை எழுதாமலே வேறு மாநிலத்திற்கு வேலை நிமித்தமாக சென்றுவிட்டார் கண்ணதாசன். இந்த நிலையில் பாடல் வரிகளை உடனே எழுதி ஆக வேண்டிய சூழல் இருந்ததால் அப்போது வளர்ந்து வந்துக்கொண்டிருந்த வாலியை அழைத்தது ஏ.வி.எம் நிறுவனம்
வாய்ப்பு கிடைத்ததும் வாலி சிறப்பான பாடல் வரிகளை எழுதி கொடுத்தார். அதனை அடுத்து சர்வர் சுந்தரம் வெளியானதும் அந்த பாடல் பெரும் ஹிட் கொடுத்தது. அவளுக்கென்ன அழகிய முகம் என்கிற பாடல்தான் அது. அதற்கு பிறகு ஏ.வி.எம் நிறுவனம் வாலிக்கும் வாய்ப்பு கொடுக்க துவங்கியது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்