Connect with us

அந்த ஒரு பாட்டுக்கு வரி எழுத முடியாமல் கஷ்டபட்ட கமல்.. வந்த வேகத்தில் மாஸ் காட்டிய வாலி!.

kamalhaasan vaali

Cinema History

அந்த ஒரு பாட்டுக்கு வரி எழுத முடியாமல் கஷ்டபட்ட கமல்.. வந்த வேகத்தில் மாஸ் காட்டிய வாலி!.

Social Media Bar

சினிமாவில் பல்வேறு வகையான திரைக்கதைகளை முயன்று பார்ப்பவர் நடிகர் கமலஹாசன். அவர் நடித்த பல திரைப்படங்களில் அந்த மாதிரியான கதாபாத்திரத்தில் வேறு யாரும் நடிக்க முடியாது என்னும் அளவிற்கு சிறப்பாக நடித்து காட்டியவர்.

அப்படி அவர் சவாலாக கையில் எடுத்த திரைப்படம்தான் தசாவதாரம். பொதுவாக ஒரு திரைப்படத்தில் கதாநாயகனுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதுவது கடினமான விஷயமாக இருக்கும். ஆனால் தசாவதாரம் திரைப்படத்தில் 10 கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கமலும் கே எஸ் ரவிக்குமாரும் இணைந்து ஒரு திரை கதையை எழுதி இருப்பார்கள்.

இந்த திரைப்படம் அப்போது பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு வாலிதான் பாடல் வரிகளை எழுதினார். அதில் முகுந்தா முகுந்தா என்னும் பாடலுக்கான இசையை அமைத்த பிறகு எப்படி இதற்கான பாடலை எழுதலாம் என்று யோசித்த பொழுது எந்த ஒரு வார்த்தையும் கமல்ஹாசனுக்கும் கிரேசி மோகனுக்கும் நினைவுக்கு வரவே இல்லை.

அந்த நிலையில் அங்கு வந்த வாலி பாடலை கேட்ட உடனேயே முகுந்தா முகுந்தா என்று பாடலை ஆரம்பித்து பாடியும் காட்டினார். அதைக் கேட்டவுடன் கமல் ஆச்சரியத்தில் வியந்து விட்டார். இவ்வளவு நாள் எவ்வளவோ தமிழ் வார்த்தைகளை கேட்ட பொழுதும் கிருஷ்ணனுக்கு முகுந்தா என்கிற இன்னொரு பெயர் இருப்பது நமக்கு தெரியவில்லையே என்று ஆச்சரியமாக கூறியுள்ளார் கமல்ஹாசன். இந்த நிகழ்வை வாலி ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.

To Top