Actor Vadivelu : தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான காமெடி நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் வடிவேலு. தமிழ் சினிமாவில் வெகு காலமாக காமெடியனாக இருந்து வந்த ஒரு நடிகர் என்றால் அது வடிவேலுவாகதான் இருக்கும்.
ஏனெனில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் துவங்கி இப்போது உள்ள சினிமா வரை யாருமே இவ்வளவு காலங்கள் தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமான காமெடியனாக இருந்தது கிடையாது எனக் கூறலாம்.
அப்படி தொடர்ந்து காமெடி நடிகராக நடித்து வந்த வடிவேலு கதாநாயகனாக நடித்த போதும் கூட காமெடி திரைப்படங்களைதான் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் அவருடைய காமெடியை தாண்டியும் வடிவேலுக்கு சில விஷயங்கள் வரும் என நிரூபித்த ஒரு திரைப்படம் என்றால் அது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம் தான்.

மாமன்னன் திரைப்படத்தில் வழக்கம்போல காமெடியனாக இல்லாமல் ஒரு சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் வடிவேலு. இந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு நடந்த சில நகைச்சுவைகளை தனது பேட்டிகள் கூறியிருந்தார்.
மாமன்னன் திரைப்படத்தில் மிகவும் சோகமான ஒரு கதாபாத்திரமாக நடித்ததால் அதற்குப் பிறகு அவருக்கு கதாநாயகனாக நடிக்க வந்த கதைகள் அனைத்தும் சோகமான கதைகளாகவே இருந்ததாம். இந்த நிலையில் ஒரு நபர் அவருக்கு ஒருமுறை போன் செய்து நான் ஒரு கதை வைத்திருக்கிறேன் சிவாஜி கணேசனே அந்த கதையை கேட்டுட்டு நடிக்க ஒப்புக்கொண்டார்.
ஆனால் அதற்குப் பிறகு சிவாஜி கணேசன் இறந்துவிட்டார். எனவே அதனைத் தொடர்ந்து அந்த கதையை படமாக்காமல் வைத்திருந்தோம் எனக் கூறியிருக்கிறார் அந்த இயக்குனர். முதலில் உங்களுக்கு எத்தனை வயசு என்று அதிர்ச்சியாக கேட்டிருக்கிறார் வடிவேலு. அதற்கு பதில் அளித்த அந்த இயக்குனர் எனக்கு 64 வயதாகிறது என கூறியிருக்கிறார்.
இவ்வளவு பழைய கதை எல்லாம் நம்மை நடிக்கப்பதற்காக எடுத்து வருகிறார்கள் என்று அப்போது கவலைப்பட்டேன் என்று கூறியிருக்கிறார் வடிவேலு. ஆனால் இந்த படம் முடியும் தருவாயில் மாரி செல்வராஜ் கூறும்பொழுது தொடர்ந்து உங்களை சோகப் படத்திற்கு கூப்பிட வாய்ப்பிருக்கிறது உஷாராக இருந்து கொள்ளுங்கள் என்று கூறியதாக வெளிப்படையாக பேசி இருந்தார் வடிவேலு.






