News
மாமன்னனுக்கு பிறகும் வாய்ப்பில்லாமல் தவிக்கும் வடிவேலு!.. இப்படி பண்ணுனா எப்படி கிடைக்கும்!.
Maamannan Vadivelu : பொதுவாக நடிகர்களுக்கு ஒரு திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்து விட்டால் அடுத்து தொடர்ந்து வரிசையாக வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கும். உதாரணமாக நடிகர் அப்பாஸ் முதன் முதலில் காதல் தேசம் திரைப்படத்தில் நடித்த போது அந்த திரைப்படம் கொடுத்த பெரும் வெற்றி காரணமாக தொடர்ந்து 18 திரைப்படங்களில் கமிட்டானார் அப்பாஸ்.
ஆனால் மாமன்னன் என்கிற பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்த பிறகும் கூட அவருக்கு தற்சமயம் பெரிதாக வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. இத்தனைக்கும் அதை திரைப்படத்தின் தலைப்பான மாமன்னன் என்னும் பெயரே வடிவேலுவின் பெயராகத்தான் அமைந்திருக்கிறது.

இருந்தாலும் ஏன் எந்த விதமான திரைப்படங்களும் அவருக்கு அமையவில்லை என்று பார்க்கும் பொழுது வடிவேலு கேட்கும் சம்பளமே அதற்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.
வடிவேலுவை வைத்து திரைப்படம் எடுக்க நினைக்கும் இயக்குனர்கள் அனைவரும் அவரை வைத்து குறைந்த பட்ஜெட்டில் உள்ள திரைப்படங்களைதான் எடுக்க நினைக்கின்றனர். ஆனால் வடிவேலு கோடிகளில் சம்பளம் கேட்பதால் அவ்வளவு சம்பளம் கொடுத்து வடிவேலுவை வைத்து படம் எடுத்தால் அந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டுமே என்கிற கேள்வியே அவர்கள் மத்தியில் இருக்கின்றன.
இதனாலேயே வடிவேலுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறது என்று கூறப்படுகிறது.
