Tamil Cinema News
அரசியலே பேசாம எப்படி அரசியலுக்கு வர முடியும்.. விஜய்யை கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்..
திரை பிரபலங்கள் அரசியலுக்குள் வருவது என்பது ஒன்றும் உலகிற்கு புதிய விஷயமல்ல. அமெரிக்காவில் தொடங்கி இந்தியா வரையில் பல திரை பிரபலங்கள் அரசியலில் பெரும் இடங்களை பிடித்துள்ளனர்.
ஏனெனில் மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள ஒரு நபரே அரசியலில் தடம் பதிக்க முடியும். அதற்கான திறன் அதிகமாக இருப்பது சினிமா நட்சத்திரங்களிடம்தான், அந்த வகையில் தற்சமயம் நடிகர் விஜய் அரசியலுக்கு வர இருப்பதாக பேச்சுக்கள் போய்க் கொண்டுள்ளன.
ஆனால் விஜய் இது குறித்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கொடுக்கவில்லை. ஆனால் இதற்கு முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக ரசிகர்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இது குறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் பேசும் பொழுது இதுவரை பிரதமரையோ அல்லது வேறு சிலரையோ யாரையும் விமர்சித்து பொதுவெளியில் விஜய் எதுவும் பேசியது கிடையாது. அதேபோல பொதுமக்கள் சார்ந்து நடக்கும் பிரச்சனைகளுக்கு விஜய் குரல் கொடுத்ததும் கிடையாது.
அது சார்ந்து எந்த ஒரு பேட்டிகளிளும் பேசியதும் கிடையாது. இப்படி அரசியல் சார்ந்து எந்த ஒரு விஷயமும் பேசாமல் நேரடியாக எப்படி அரசியலுக்குள் வரப் போகிறார் என தெரியவில்லை என்று கூறியுள்ளார் வலைப்பேச்சு அந்தணன்.
