Connect with us

பத்மினிக்கு கூட இந்தாளு இப்படி முத்தம் கொடுத்தது இல்ல..! –  சிவாஜி கணேசனை கலாய்த்த வாலி!..

Cinema History

பத்மினிக்கு கூட இந்தாளு இப்படி முத்தம் கொடுத்தது இல்ல..! –  சிவாஜி கணேசனை கலாய்த்த வாலி!..

Social Media Bar

சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் பெரும் நட்சத்திரங்களில் முக்கியமானவர். நடிகர் திலகம் என அழைக்கப்பட்டவர்.  ஒவ்வொரு படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசனுக்கு பிறகு ஒரு சிறப்பான நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் நடித்த பல படங்கள் நல்ல ஹிட் கொடுத்துள்ளன. அதில் முக்கியமான திரைப்படம் தேவர் மகன். இந்த படத்தில் கமல், சிவாஜி இருவருமே சேர்ந்து நடித்திருந்தனர். இதனால் இந்த படத்திற்கு அப்போதே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இளையராஜா சிவாஜியின் மிகப்பெரிய ரசிகராவார். எனவே அவர் இசையமைக்கும் பாடலில் சிவாஜியின் குரல் இடம் பெற வேண்டும் என ஆசைப்பட்டார் இளையராஜா. எனவே தேவர் மகன் படத்தின் ஒரு பாடலில் சிவாஜி பேசுவது போன்ற இடத்தை வைத்தனர்.

சிவாஜியும் அதற்காக பேசி கொடுத்தார். சிவாஜியுடன் போட்டோ எடுக்க வேண்டும் என வெகு நாட்களாக ஆசைப்பட்டார் இளையராஜா. எனவே அன்றைய தினம் போட்டோகிராபரை வரவழைத்து சிவாஜி கணேசன் அருகில் நின்று போட்டோ எடுத்தார் இளையராஜா.

அப்போது எதிர்பாராத விதமாக சிவாஜி இளையராஜா அருகில் வந்து அவரது கன்னத்தில் அன்பாக முத்தமிட்டார். அதுவே அப்படியே போட்டோவாக எடுக்கப்பட்டது. இது இளையராஜாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனவே அந்த போட்டோவை எடுத்துக்கொண்டு நேராக வாலியை சென்று பார்த்தார் இளையராஜா.

அவரிடம் இந்த போட்டோவை காட்டியுள்ளார். அதை பார்த்த வாலி “என்னய்யா இது இந்தாளு பத்மினிக்கு கூட இப்படி முத்தம் கொடுத்துருக்க மாட்டாரு போலருக்கே” என கலாய்த்துள்ளார். இதை இளையராஜா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

To Top