Tamil Cinema News
பட வாய்ப்பு குறைந்ததால் எடுத்த முடிவு.. வாணி போஜனை அப்படி யாரும் பார்த்தது இல்ல.
தமிழ் சினிமாவில் சீரியல் மூலமாக வந்து தற்சமயம் சினிமாவில் முக்கிய நடிகை ஆக இருந்து வருபவர் நடிகை வாணி போஜன்.
பெரும்பாலும் வாணி போஜனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சினிமாவில் அறிமுகமானது முதலே பெரிதாக கவர்ச்சியாக நடிக்காத ஒரு நடிகையாக வாணி போஜன் இருந்து வருகிறார்.
வாணி போஜன் நடித்த ஓ மை கடவுளே திரைப்படம்தான் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது. அதற்கு முன்பு ஒரு சில சீரியஸ் கதை களங்களில் நடித்தார் வாணி போஜன்.
வாணி போஜன் எடுத்த முடிவு:
ஆனால் அது அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை இந்த நிலையில் தொடர்ந்து சினிமாவில் முயற்சித்து வரும் வாணி போஜனுக்கு இப்பொழுது வாய்ப்புகள் என்பது குறைந்து வருகின்றன.
நிறைய இளம் நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் அறிமுகமான வண்ணம் இருக்கின்றனர். இதனால்தான் வாணி போஜனுக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டன என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதனை அடுத்து வாணி போஜன் கவர்ச்சி கதாபாத்திரத்தில் களமிறங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் அவருக்கு நீச்சல் உடை காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து அவர் நடிக்க இருக்கும் ஒரு வெப் தொடரில் கவர்ச்சியாக நடிக்க இருக்கிறார் வாணி போஜன் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.
