Connect with us

மகளை உள்ள அனுப்புனதே சொந்த பப்ளிசிட்டிக்காகதான்!.. வனிதா போட்ட ஸ்கெட்ச்..

vanitha jovikha

Bigg Boss Tamil

மகளை உள்ள அனுப்புனதே சொந்த பப்ளிசிட்டிக்காகதான்!.. வனிதா போட்ட ஸ்கெட்ச்..

Social Media Bar

பிரபலங்களை மேலும் பிரபலமாக்க உதவும் நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது. இதனால் பெரிதாக பிரபலமாகாமல் அல்லது ஃபீல்ட் அவுட் ஆன பிரபலங்கள் தங்களை மீண்டும் பிரபலப்படுத்திக் கொள்ள இந்த நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அந்த வகையில் தற்சமயம் பிக் பாஸ் சீசன் 7 சூடு பிடித்து சென்று கொண்டுள்ளது. இதில் நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா விஜயகுமார் கலந்து கொண்டுள்ளார்.

ஜோவிகா விஜயகுமார் பெரிதாக பிரபலம் இல்லாதவர். அவரைக் குறித்து இணையத்தில் கூட பெரிதாக யாருக்கும் அவ்வளவாக தெரியாது. இருந்தாலும் அவரை பிக்பாஸிற்கு அனுப்புவதன் மூலம் அவரை பிரபலப்படுத்தலாம் என வனிதா அவரை பிக் பாஸிற்கு அனுப்பி உள்ளார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இதன் மூலமாக வனிதாவும் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டு வருகிறார். தினமும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசி அதை யூடியூப் தளங்களுக்கு அளித்து வருகிறார் வனிதா இப்படி ஒரு பிளான் செய்துதான் அவரது பெண்ணை உள்ளே அனுப்பி இருக்கிறாரா என்று நெட்டிசன்கள் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

To Top