Connect with us

சிறு வயதிலேயே பல பேரால் நடந்த கொடுமை… ஓப்பன் டாக் கொடுத்த வரலெட்சுமி.!

Tamil Cinema News

சிறு வயதிலேயே பல பேரால் நடந்த கொடுமை… ஓப்பன் டாக் கொடுத்த வரலெட்சுமி.!

Social Media Bar

சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏதேனும் ஒரு வாய்ப்பை பெற்ற நடித்து வருகிறார். சமீப காலங்களாக அவர் வில்லி கதாபாத்திரங்களை அதிகமாக எடுத்து நடித்து வருகிறார்.

அது அவருக்கு நல்ல வரவேற்பையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட மதகஜராஜா திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்திருந்தார்.

அந்த படம் இப்பொழுது வெளியான காரணத்தினால் அந்த படம் மூலம் அவருக்கு மீண்டும் ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்கிற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கெமி என்கிற பெண் தனக்கு வாழ்நாளில் நடந்த கொடுமைகள் குறித்து பேசி இருந்தார். தனக்கு நெருக்கமான சொந்தக்காரர்கள் மூலமாகவே அதிகமாக பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகி இருப்பதாக அவர் கூறினார்.

varalakshmi

இந்த நிலையில் அதனை கேட்டு கண்ணீர் விட்ட வரலட்சுமி சரத்குமார் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறும் பொழுது பிரபலங்களின் பிள்ளைகள் என்றால் எந்த கஷ்டமும் படாமல் வளர்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறார்கள் அது தவறு.

நான் சிறுவயதாக இருந்த பொழுது எனது தாய் தந்தை இருவருமே வேலைக்கு சென்று விடுவார்கள். அதனால் என்னை யாராவது சொந்தக்காரர்கள் வீட்டில் தான் விட்டு செல்வார்கள். ஆனால் அவர்கள் என்னை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி இருக்கின்றனர்.

நான் ஒரு ஆறு பேரிடமாவது இப்படி அனுபவித்திருப்பேன் என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார் வரலட்சுமி சரத்குமார் இப்போது இது அதிக ட்ரெண்டாக தொடங்கி இருக்கிறது.

To Top