Tamil Cinema News
அந்த விஷயம் பொண்ணு மாதிரியே இல்ல…மூஞ்சு முன்னாடியே சொன்ன இயக்குனர்.. உண்மையை கூறிய வரலெட்சுமி..!
தமிழ் சினிமாவில் நிறைய வாரிசு நடிகர்களும் நடிகைகளும் இருந்து வருகின்றனர். பொதுவாகவே இந்திய அளவில் இந்த வாரிசு நடிகர் நடிகைகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அப்படியாக தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமாரின் மகள் வரலெட்சுமி இருந்து வருகிறார்.
தமிழில் போடா போடி என்கிற திரைப்படத்தின் மூலமாக முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் வரலெட்சுமி. அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் வரலெட்சுமிக்கு பெரிதாக வாய்ப்புகள் என்பதே கிடைக்காமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் வரலெட்சுமிக்கு கதாநாயகியாக வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து அவர் தமிழில் வில்லியாக நடிக்க துவங்கினார். இதனை தொடர்ந்து அவருக்கு தெலுங்கு சினிமாவிலும் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இப்படியான சூழலில் அவர் நடிப்பில் 12 வருடங்களுக்கு முன்பு உருவான மதகஜராஜா திரைப்படம் தற்சமயம் திரைக்கு வந்துள்ளது. இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் வரலெட்சுமிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் இதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது அந்த படத்தில் நடிக்கும்போது பெண்களை போல எனக்கு நடக்க வரவில்லை. அப்போது சுந்தர் சி சார் என்னிடம் சத்தம் போட்டார். பெண் போல நாணமாக நடக்க வேண்டும் என கூறினார்.
எனவே கஷ்டப்பட்டுதான் அந்த படத்தில் நடித்தேன் என கூறியுள்ளார் வரலெட்சுமி சரத்குமார்.