Connect with us

இயக்குனர் இருக்குறப்பையே இப்படி ஒரு வேலையா!.. யுவன் சங்கர் ராஜாவிடம் திருட்டு தனமாக வெங்கட்பிரபு செய்த வேலை!.

vengat prabhu yuvan

Tamil Cinema News

இயக்குனர் இருக்குறப்பையே இப்படி ஒரு வேலையா!.. யுவன் சங்கர் ராஜாவிடம் திருட்டு தனமாக வெங்கட்பிரபு செய்த வேலை!.

Social Media Bar

யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் பெரும் ரசிகப்பட்டாளத்தை கொண்டுள்ள முக்கியமான இசையமைப்பாளர் ஆவார். தமிழில் இளையராஜா ஒரு விதமான இசையை கொடுத்தப்போது அதற்கு முற்றிலும் புது விதமான ஒரு இசையை கொடுத்து களத்தில் இறங்கியவர் ஏ.ஆர் ரகுமான்.

அதே சமயம் ஏ.ஆர் ரகுமானை போல் அல்லாமல், இளையராஜாவை போலும் இல்லாமல் வேறு ஒரு இசையை அறிமுகம் செய்தவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. எப்படி கானா பாடலுக்கு தேவா ஒரு பிரபலமான இசையமைப்பாளராக இருக்கிறாரோ அதே போல மெலோடியை பொறுத்தவரை அதில் யுவன் சங்கர் ராஜா பிரபலமானவர்.

இயக்குனர் வெங்கட் பிரபுவின் முதல் படம் முதலே அவர் இயக்கிய அனைத்து படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜாவே இசையமைத்து வந்தார். மற்ற இயக்குனர்கள் போல ஸ்ட்ரிக்டாக எல்லாம் இருக்க மாட்டார் வெங்கட் பிரபு. யுவன் என்ன இசை போட்டு கொடுக்கிறாரோ அதை அப்படியே வாங்கி கொள்வாராம் வெங்கட்பிரபு.

இதுக்குறித்து ஒரு சம்பவத்தை வெங்கட் பிரபுவே கூறியுள்ளார். ஒருமுறை வெங்கட் பிரபு இயக்கிய ஒரு திரைப்படத்திற்கு அவசரமாக பாடலுக்கு இசையமைக்க வேண்டியிருந்தது. ஆனால் யுவன் சங்கர் ராஜா அப்போது வேறு ஒரு படத்தின் ரீ ரெக்கார்டிங்கில் இருந்திருக்கிறார்.

இந்த நிலையில் இயக்குனர் முன்னிலையிலேயே அவரை சந்தித்த வெங்கட் பிரபு, அவசரமாக ஒரு பாடல் தேவைப்படுகிறது. உடனே போட்டுகொடு என கேட்டுள்ளார். யுவன் சங்கர் ராஜாவும் ரீ ரெக்கார்டிங் செய்வது போலவே நடித்துக்கொண்டு அந்த பாடலை இசையமைத்து கொடுத்துள்ளார்.

இது தெரியாமல் ஏதோ குடும்ப விஷயம் பேசுகிறார்கள் போல என அமைதியாக இருந்துள்ளார் படத்தின் இயக்குனர். சென்னை 28 இல் வரும் ஓஹோ என்னனமோ பண்ணுது எனும் அந்த பாடல்தான் அப்போது யுவன் போட்டுக்கொடுத்த பாடல் என வெங்கட் பிரபு பேட்டியில் கூறியுள்ளார்.

To Top