Connect with us

எங்க போனாலும் கேட் போட்டா எப்படி!.. கோட் திரைப்படத்தை வெளியிடுவதில் வந்த பிரச்சனை!.. தளபதிக்கேவா!..

vijay GOAT

News

எங்க போனாலும் கேட் போட்டா எப்படி!.. கோட் திரைப்படத்தை வெளியிடுவதில் வந்த பிரச்சனை!.. தளபதிக்கேவா!..

Social Media Bar

GOAT vijay Movie: லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். கோட் திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். வெங்கட் பிரபு இயக்குவதாலேயே அந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

பொதுவாக வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. மங்காத்தா மாதிரியான டெரரான திரைப்படங்களிலேயே அதிகமாக நகைச்சுவை காட்சிகளை வைத்திருந்தார் வெங்கட்பிரபு. மேலும் விஜய்யை காமெடியாக பார்த்து வெகு நாட்கள் ஆகிறது என்பதால் இந்த காம்போவிற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.

GOAT
GOAT

இந்த நிலையில் கோட் திரைப்படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை எப்போது வெளியிடுவது என்பதில் தற்சமயம் சிக்கல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை முதலில் தீபாவளிக்குதான் வெளியிட திட்டமிட்டனர். ஆனால் தீபாவளிக்குதான் தற்சமயம் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. எனவே அதற்கு போட்டியாக கோட் திரைப்படத்தை வெளியிடுவது அவ்வளவு சரியாக இருக்காது என யோசித்துள்ளனர்.

எனவே இந்த படத்தை ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடலாம் என்றால் அன்றுதான் அல்லு அர்ஜூன் நடிப்பில் தயாராகி வரும் புஷ்பா 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு இந்திய அளவிலேயே அதிக வரவேற்பு இருந்து வருவதால் அன்றைய தினம் வெளியிடுவதும் பிரச்சனைதான் என்றாலும் ஆகஸ்ட் 15 அன்றுதான் இந்த திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

To Top