Connect with us

வெங்கட் பிரபு நாக சைதன்யா கூட்டணி – படத்திற்கு பேர் வச்சாச்சு!

News

வெங்கட் பிரபு நாக சைதன்யா கூட்டணி – படத்திற்கு பேர் வச்சாச்சு!

Social Media Bar

தமிழில் மிகவும் கலகலப்பான இயக்குனர் என வெங்கட் பிரபுவை சொல்லலாம். ஜாலியாக படம் எடுக்கும் ஒரு இயக்குனர். இந்த வருடம் அவர் இயக்கி வெளியான மாநாடு திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. 

இந்த நிலையில் தற்சமயம் வெங்கட் பிரபு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து படம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நேர்மையான போலீஸாக நடித்துள்ளார் நாக சைதன்யா. சிவா என்னும் கதாபாத்திரத்தில் இவர் தோன்றுவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு கஷ்டடி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வெங்கட் பிரபு படத்திலும் படத்திற்கு கீழ் வெங்கட் பிரபு பெயர் போட்டு ஒரு வசனம் வரும். அதே போல இந்த படத்தில் A venkat prabhu Hunt என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

கீர்த்தி ஷெட்டிக்கு ஏற்கனவே ஒரு ரசிக வட்டாரம் உருவாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்குவதால் இந்த படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

படத்தின் போஸ்டரை பார்க்கும்போது நேர்மையான போலீஸாக இருந்து ஏதோ ஒரு பிரச்சனையால் இவரே போலீஸில் மாட்டிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top