Latest News
பா.ரஞ்சித் திரைப்படத்தில் வெற்றிமாறன் செஞ்ச சம்பவம்!.. தயாரிப்பாளரை நம்ப வைக்க என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு!..
Vetrimaaran : தமிழ் சினிமாவில் பொதுவாக சமூக நீதி திரைப்படங்களை படமாக்கும் பொழுது அவை கமர்சியலாக வெற்றியை கொடுக்காது. கதை அமைப்பும் அந்த மாதிரிதான் இருக்கும். ஆனால் கமர்சியலாகவும் ஒரு திரைப்படத்தை வெற்றி கொடுத்து அதே சமயம் அதில் சமூக நீதியையும் பேசக்கூடிய ஒரு இயக்குனராக பா.ரஞ்சித் இருக்கிறார்.
பா.ரஞ்சித் இயக்கிய கபாலி, காலா, மெட்ராஸ் போன்ற திரைப்படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வெற்றியை கொடுத்த திரைப்படங்கள்தான். அதிக சண்டை காட்சிகள் பாடல்கள் அனைத்துமே கொண்ட திரைப்படங்கள்தான் என்றாலும் அந்த திரைப்படங்கள் வழியாக மக்கள் மத்தியில் பல அரசியலை பேசி இருப்பார் பா.ரஞ்சித்.
அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் அதே வழியை நிறைய இயக்குனர்கள் பின்பற்ற துவங்கினார்கள். இந்த நிலையில் பா.ரஞ்சித் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு மேடையில் சில விஷயங்களை பேசி இருந்தார்.
ஆரம்பத்தில் பா ரஞ்சித் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம்தான் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். வெங்கட் பிரபு மங்காத்தா திரைப்படத்தை இயக்கிய சமயத்தில் பா.ரஞ்சித் தனியாக சென்று அட்டகத்தி திரைப்படத்தை இயக்க துவங்கியிருந்தார்.
வெற்றிமாறன் செய்த சம்பவம்:
அட்டகத்தி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த போதுதான் அந்தப் படம் குறித்த தகவல் வெங்கட் பிரபுவிற்கு வந்தது. இந்த நிலையில் தயாரிப்பாளர் வாங்குவதற்காக அந்த திரைப்படத்தை திரையிட இருந்தனர். அப்பொழுது அந்த காட்சிக்கு வெங்கட் பிரபு, ஞானவேல் ராஜா, வெற்றி மாறனும் சென்றிருந்தனர்.
அந்த திரைப்படத்தை பார்த்த வெற்றிமாறன் மிகவும் ரசித்து பார்க்க துவங்கினார். ஒவ்வொரு காட்சிக்கும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார் வெற்றிமாறன். ஏனெனில் அவரும் அரசு கல்லூரியில் படித்தவர் என்பதால் அட்டகத்தி திரைப்படம் அவருக்கு மிகவும் தொடர்புடைய திரைப்படமாக இருந்தது.
இந்த நிலையில் அவர் சிரிப்பதை பார்த்த ஞானவேல் ராஜா இந்த திரைப்படம் நல்ல வெற்றியை கொடுக்கும் என்று முடிவு செய்து படத்தை வாங்கி வெளியிட்டார். இதை கூறிய வெங்கட் பிரபு வெற்றிமாறன் சிரித்ததாலேயேதான் ஞானவேல் ராஜாவிற்கு அந்த படத்தை வாங்குவதற்கான நம்பிக்கை வந்தது என்று கூறியிருக்கிறார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்