News
அஜித்தை பழிவாங்காமல் விட மாட்டேன்!.. லண்டனுக்கு ப்ளைட் ஏறிய வெங்கட்பிரபு!.. இதுதான் சம்பவமா?..
Ajith vengat prabhu : தமிழ் சினிமாவில் பெறும் கதாநாயகர்களை வைத்து நல்ல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. பொதுவாக பெரும் இயக்குனராக ஆன பிறகு பலரும் கொஞ்சம் திமிராக நடந்துக்கொள்வார்கள்.
ஆனால் வெங்கட்பிரபுவை பொருத்தவரை அவர் சாதாரணமாக ஏதோ பக்கத்து வீட்டு ஆளிடம் பேசுவது போல்தான் அனைவரிடமும் பேசுவார். அதனாலேயே வெங்கட் பிரபு மக்களுக்கு நெருக்கமான ஒரு இயக்குனர் என கூறலாம்.
டிவி நிகழ்ச்சிகளாக இருந்தாலும் யூ ட்யூப் பேட்டிகளாக இருந்தாலும் வெங்கட் பிரபு கலந்து கொள்ளும் பொழுது அது மிக சுவாரசியமாக இருப்பதை பார்க்க முடியும். இந்த நிலையில் வெங்கட் பிரபு முதன் முதலாக விஜய்யை வைத்து தற்சமயம் இயக்கி வரும் திரைப்படம் கோட்.

வெங்கட் பிரபு படங்கள் இயக்கும்போது அதில் பெரிதாக மெனக்கட்டு வேலை செய்ய மாட்டார் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. மேம்போக்காக படங்களை படம் பிடித்து முடித்து விடுவார் என்று கூறுவார்கள். ஆனால் தற்சமயம் ஒரு பாடலுக்காக யுவன் சங்கர் ராஜாவும் வெங்கட் பிரபுவும் லண்டனுக்கு ரெக்கார்ட் செய்ய சென்றுள்ளனர்.
ஏனெனில் அந்த பாடல் சிறப்பாக வரவேண்டும் என்றும் அதற்கான உபகரணங்கள் லண்டனில் தான் உள்ளன என்றும் கூறி யுவன் சங்கர் ராஜா வெங்கட் பிரபுவையும் அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார். ஒரு பாடலுக்காக எதற்கு வெங்கட் பிரபு இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்று பலரும் பேசும் பொழுது இது பற்றி சில செய்திகள் வெளி வருகின்றன.
அதாவது மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு அஜித் வெங்கட் பிரபுவிற்கு வாய்ப்புகள் கொடுக்கவில்லை. பலமுறை அஜித்திடம் வாய்ப்பு கேட்ட பொழுதும் வெங்கட் பிரபுவிற்கு வாய்ப்பு கொடுக்க மறுத்துவிட்டார் அஜித். இந்த நிலையில் விஜய் கொடுத்திருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பான ஒரு திரைப்படத்தை எடுத்து விட முயற்சி செய்கிறார் வெங்கட்பிரபு.
இந்த படம் மூலமாக விடாமுயற்சி திரைப்படத்தை தோற்கடிப்பதன் மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபிக்க நினைக்கிறார் வெங்கட் பிரபு என ஒரு பேச்சு உள்ளது.
