News
GOAT Movie : காந்தின்னு பேர் வச்சா அதை செய்ய கூடாதா?.. கோட் படம் குறித்து பேசிய வெங்கட் பிரபு!..
தற்போது விஜய் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து இருந்த கோட் படத்தின் டிரைலர் வேலையாகி ரசிகரிக்களுக்கிடையே நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. கோட் படத்தின் டிரெய்லரை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வெங்கட் பிரபு, செய்தியாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.
இதில் காந்தி குறித்த கேள்விக்கு அவர் சுவாரசியமான பதில் ஒன்றை கூறி இருக்கிறார். தற்போது அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படத்தின் பல சுவரஸ்ய தகவல்களை பகிரந்துள்ளார்.
நடிகர் விஜயின் கோட் படம்
விஜய் நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், ஜெயராம், மோகன், லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி, வைப், யோகி பாபு ஆகிய பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் விஜய் டீன் ஏஜில் வருவதால் படத்தை பற்றிய ஆவல் ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த திரைப்படம் அடுத்த மாதம் செப்டம்பர் 5-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு திரையரங்குகளில் வெளிவர உள்ளது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகிய நிலையில் ஆக்சன், சென்டிமென்ட், நகைச்சுவை கலந்த திரைப்படமாக இருக்கும் என்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் விஜய் முன்னதாக நடித்த கில்லி படத்தில் வரும் காட்சிகள் போன்று இந்த படத்தில் அமைந்திருப்பதால் படம் எவ்வாறு இருக்கும் என அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
செய்தியாளர்களை சந்தித்த வெங்கட் பிரபு
படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில் வெங்கட் பிரபு செய்தியாளர்களை சந்தித்தார். கோட் படத்தில் அப்பா விஜய்க்கு காந்தி என பெயர் வைக்கப்பட்டு அவர் குடிப்பது போல காட்சிகள் வைத்துள்ளீர்கள் இது சரியானதா? என கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு வெங்கட் பிரபு காந்தி என்று பெயர் வைத்தால் சரக்கு அடிக்க கூடாதா? என்னுடைய நண்பர் பெயரும் காந்தி தான் அவன் என்னென்ன அட்டகாசம் பண்ணுவான் தெரியுமா? என கூறியிருக்கிறார்.
மேலும் மகாத்மா காந்தியுடன் ஏன் இந்த படத்தில் வரும் காந்தியை ஒப்பிட்டு பேசுகிறீர்கள்? இது ஒரு தவறான முன்னுதாரணம் என அவர் தெரிவித்திருக்கிறார்.
