News
டைனோசரை வச்சே எடுத்தாலும் கதை நல்லா இருந்தாதான் படம் ஓடும்!.. பேரரசை கேலி செய்த வெற்றிமாறன்!..
சினிமாவை பொறுத்தவரை ஒரு இயக்குனருக்கு முதல் படமே பெரிய நடிகர் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்துவிட்டால் அதை விட பெரும் பாக்கியம் ஒன்றுமே இல்லை என கூறலாம். அப்படி வாய்ப்பை பெற்று சினிமாவிற்கு வந்தவர்தான் இயக்குனர் பேரரசு.
பேரரசுவின் முதல் திரைப்படத்திலேயே விஜய் கதாநாயகனாக நடித்தார். அவரது நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை கொண்டு திருப்பாச்சி திரைப்படம் வெளிவந்தது. கிராமத்தில் வாழும் ஒரு அண்ணன் தனது தங்கை வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் எனவும், தனது நண்பனின் சாவுக்கு பழி வாங்க வேண்டியும் சென்னையில் உள்ள ரவுடிகளை களை எடுப்பதாக கதை இருக்கும்.

அதற்கு பிறகும் பேரரசு இயக்கத்தில் சிவகாசி திரைப்படத்தில் நடித்தார் விஜய். அதுவும் நல்ல ஹிட் கொடுத்தது. ஆனால் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேரரசு திரைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாமல் போனது. திருப்பதி பழனி மாதிரியான திரைப்படங்கள் அவருக்கு பெரும் தோல்வியை கொடுத்தன.
இந்த நிலையில் தற்சமயம் சினிமாவில் பட வெளியீட்டு விழாக்கள் மாதிரியான நிகழ்வுகளில் அவரை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் கள்வன் என்கிற திரைப்படத்தின் விழாவிற்கு பேரரசு வந்திருந்தார். யானையை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் படமாக்கப்படுகிறது.
வெற்றிமாறன் பதில்:
இந்த நிலையில் இதுக்குறித்து பேசிய பேரரசு கூறும்போது பொதுவாக யானைகளை வைத்து எடுக்கப்படும் படங்கள் நல்ல வெற்றியை கொடுத்திருக்கின்றன. எம்.ஜி.ஆர் நடித்த நல்ல நேரம், கும்கி மாதிரியான படங்களை போலவே இந்த படமும் வெற்றியை கொடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய வெற்றிமாறன் கூறும்போது யானையை வைத்து எடுத்தாலும், டைனோசரை வைத்து எடுத்தாலும் கதை நன்றாக இருந்தால்தான் படம் வெற்றிப்பெரும் என கூறுவிட்டு சென்றுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
