Vetrimaran: தமிழ் சினிமாவில் தற்போது வரும் படங்கள் எல்லாம் மாறுபட்ட கதைகள் கொண்ட படமாக வெளி வருகிறது. மேலும் ஒரு சில படங்கள் சமூகத்திற்கு தேவையான பல கருத்துக்களை தெரிவித்து இருக்கும்.
ஒரு சில படங்கள் சில வரலாற்று நிகழ்வுகளையும் அல்லது வரலாற்றில் இடம் பிடித்த முக்கிய தலைவர்களையும் கொண்டு மையமாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள் வெளிவந்து அது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும்.
இதுபோல காதல், நட்பு, அரசியல், நகைச்சுவை, கடவுள் போன்ற பல விடயங்களை வைத்து படங்கள் உருவாக்கப்பட்டு வெளியிடப்படும். மேலும் படத்தின் மூலம் ஏதாவது ஒரு சமூக கருத்துக்கள் ஒரு சில படங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில் பிரபல இயக்குனர் ஒருவர் தமிழ் சினிமாவில் அந்தந்த கால கட்டங்களில் நடந்த ஒரு ஒரு சில நிகழ்வுகளை வைத்து படங்கள் வந்திருக்கும். ஆனால் அது யாவும் கைதட்டலுக்காக மட்டுமே தான் அந்த படங்கள் வந்திருக்கும் என பிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. யார் அந்த இயக்குனர் ஏன் அவ்வாறு கூறினார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இயக்குனர் வெற்றிமாறன்
இவர் முதன் முதலில் “பொல்லாதவன்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த “ஆடுகளம்” என்ற திரைப்படத்தின் மூலம் தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் விருதுகளை வென்றார்.

மேலும் இந்த திரைப்படத்திற்காக 6 தேசிய விருதுகள் கிடைத்தது. மேலும் இயக்குனர் பாலு மகேந்திராவின் உதவி இயக்குனராக சேர்ந்தார்.
இவர் “பொல்லாதவன், ஆடுகளம் இயக்கிய பிறகு விசாரணை, வடசென்னை, அசுரன், பாவ கதைகள், விடுதலை பாகம் 1, 2” என பல படங்களை இயக்கியிருக்கிறார்.
வெறும் கைதட்டலுக்காக மட்டும் தான் படங்கள் வந்துள்ளது
இந்நிலையில் அவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, ஒரு சிலர் வெறும் கைதட்டலுக்கும், பாராட்டுக்காகவும் தான் படத்தில் நடித்திருக்கிறார்கள். சொல்லப்போனால் அந்த நேரத்தில் மக்களுக்கு எதன் மீது கோபம் உள்ளதோ, அக்கறை உள்ளதோ, அந்த சமயத்தில், அந்த காலகட்டத்தில் என்ன ட்ரெண்டிங்கில் இருக்கிறதோ அதனை வைத்து படம் எடுப்பார்கள். ஆனால் அந்த படத்தின் மூலம் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கிறதா என்று பார்த்தால் ஒன்றும் நிகழ்ந்திருக்கிறது.
உதாரணமாக மேலும் அவர் பேசும் பொழுது இந்தியா… இந்தியா… என்று பேசுவார்கள். அதன் பிறகு லஞ்சம் வாங்குவது குற்றம் என்று படம் எடுப்பார்கள். அதன் பிறகு விவசாயத்தைப் பற்றி பேசுவார்கள். ஆனால் இது யாவும் கைதட்டலுக்கும், பாராட்டுக்கும் மட்டுமே தான். ஆனால் உண்மையில் சொல்லப்போனால் எந்த ஒரு மாற்றமும் நிகழ்ந்திருக்காது என அவர் பேசியிருக்கிறார்.