News
யாரு ஸ்லோவா படம் எடுக்குறான்னு போட்டி போல!.. நெல்சனோடு போட்டி போடும் ஞானவேல்!.. வேட்டையன் கதை வேற போலீசுக்கு எதிரா இருக்காம்!..
Rajinikanth vettaiyan movie: தமிழில் சமூக விழிப்புணர்வை பேசும் வகையில் திரைப்படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் தா.செ ஞானவேல். அவர் இயக்கிய ஜெய் பீம் திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஜெய்பீம் திரைப்படத்தின் 2 மாதங்களுக்குள்ளாகவே முடித்துவிட்டார் இயக்குனர் தா.செ ஞானவேல். எனவே அவர் அடுத்து ரஜினிகாந்தை வைத்து இயக்கும் வேட்டையன் திரைப்படமும் 2 மாதங்களுக்குள்ளாகவே முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 8 மாதங்களை கடந்தப்பிறகும் கூட இன்னும் அந்த படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடியவில்லை. கிட்டத்தட்ட ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பும் இதே போலவே மிகவும் காலதாமதம் ஆனது. இந்த நிலையில் இன்னும் 65 நாட்களுக்கு படத்திற்கான படப்பிடிப்பு முடியாமல் இருக்கிறதாம்.

எனவே இந்த படம் தீபாவளிக்குதான் வெளியாகும் என பேச்சுக்கள் உள்ளன. ஜெய் பீம் திரைப்படம் மாதிரியே இந்த திரைப்படமும் போலீஸ் வன்முறைக்கு எதிரான திரைப்படம் என கூறப்படுகிறது. படத்தில் ரஜினிகாந்த் அவருக்கே தெரியாமல் ஒரு நல்லவனை என்கவுண்டரில் கொன்றுவிட அதை வைத்து கதை செல்வதாக பேச்சுக்கள் உள்ளன.
இந்த நிலையில் இந்த கதைக்கு வரவேற்புகள் அதிகமாக எழுந்து வருகின்றன. படத்தின் டீசரில் ரஜினி ஏதோ துப்பாக்கியால் சுடுவது போல காட்சிகள் இருந்தாலும் படம் அப்படியிருக்காது என கூறப்படுகிறது.
