Tamil Cinema News
தல அஜித்துக்கு நான் எழுதுன கதை! உண்மையை கூறிய விக்னேஷ் சிவன்..! அஜித் மறுத்த கதை இதுதான்.!
தமிழில் நானும் ரவுடிதான், காத்து வாங்கல ரெண்டு காதல் மாதிரியான திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்த திரைப்படத்தை இயக்கும்பொழுது இவருக்கும் அந்த படத்தின் நடிகையான நயன்தாராவுக்கும் இடையே காதல் உருவானது.
வெகுகாலங்களாக தொடர்ந்து வந்த காதல் பிறகு திருமணத்தில் முடிந்தது. தற்சமயம் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். க்னேஷ் சிவன் ஒரு நல்ல ஆக்ஷன் பிளாக் திரைப்படம் என்று எந்த ஒரு திரைப்படமும் இயக்கியது கிடையாது.
விக்னேஷ் சிவனுக்கு காமெடி திரைப்படம் மற்றும் காதல் திரைப்படங்கள் மட்டுமே இயக்குவதற்கு வரும். இந்த நிலையில் நடிகர் அஜித்தை வைத்து இவர் திரைப்படம் இயக்குவதாக இருந்தது. துணிவு திரைப்படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தான் நடிகர் அஜித் நடிப்பதற்கு இருந்தார்.
விக்னேஷ் சிவனின் கதை:
ஆனால் விக்னேஷ் சிவனின் கதை அவருக்கு பிடிக்காத காரணத்தினால் பிறகு மகிழ்திருமேனி திரைப்படத்தில் நடிப்பதற்கு சென்று விட்டார். அப்படி அஜித்துக்கு பிடிக்காமல் போனது என்ன கதை என்பது குறித்து விக்னேஷ் சிவன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
அதில் விக்னேஷ் சிவன் கூறும் பொழுது நான் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ஆவேஷம் திரைப்படம் மாதிரியான ஒரு கதையைதான் எழுதியிருந்தேன். அந்தக் கதையில் நிறைய நகைச்சுவைகள் இருந்தது.
கதை அஜித்துக்கு ஏற்கனவே நானும் ரவுடிதான் திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது எனவே இந்த படமும் அவருக்கு பிடிக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தயாரிப்பு நிறுவனத்தை பொருத்தவரை அவர்களது எதிர்பார்ப்பு வேறுவிதமாக இருந்தது.
முழுக்க முழுக்க மாஸ் கதைகளம் கொண்ட ஒரு படத்தை அவர்கள் நடிகர் அஜித்துக்கு எதிர்பார்த்தார்கள். இதில் நிறைய காமெடிகள் இருக்கின்றது என்று என்னிடம் கேட்டார்கள். அதனால் தான் அந்த படம் பண்ண முடியாமல் போய்விட்டது என்று கூறியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்