படம் நல்லா ஓடிடணும் சாமி.. வேண்டுதல் வைத்த விக்னேஷ் – நயன்தாரா!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ள படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், நயன்தாராவின் ரௌடி பிக்சர் நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இன்று திரைப்படம் வெளியாவதால் திருப்பதி சென்ற விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி அங்கே வேண்டுதல் வைத்துள்ளதாக தெரிகிறது. இன்று படம் வெளியாகியுள்ள நிலையில் முதல் ஷோ பார்த்தவர்களிடம் இருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

You may also like...