News
எதிரியாக பார்த்த அஜித்தை நண்பராக்கிய விஜய்… கோட் படத்தில் நடந்த சம்பவம்!.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னாடி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரும் தங்களின் சினிமா பயணத்தை ஒன்றாக தொடங்கிய நிலையில் இருவரும் சினிமாவிற்குள் நுழைந்த விதம் வெவ்வேறாக இருந்தது.
ஆரம்பத்தில் இந்த இரு நடிகர்களுமே ஹூரோ கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர்கள் அல்ல என பலரும் கூறி வந்த நிலையில், தற்போது இருவருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் முன்னணி நடிகர்களாக மாறிய இருவர்களுக்கும் இடையில் பிரச்சனை இருந்ததாக கூறப்படும் வரும் நிலையில் தற்போது விஜய் நடித்துள்ள ஒரு படத்தில் அஜித் படத்தைப் பற்றிய வசனம் இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள்
ஆரம்ப காலகட்டத்தில் இருவரும் தங்களுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கிய போது பலராலும் நிராகரிக்கப்பட்டவர்களாகவே இருந்துள்ளனர்.
நடிகர் விஜய் அவரின் அப்பா சினிமா துறையில் பிரபல இயக்குனராக இருந்ததால், சினிமாவில் அவர் நுழைவது சுலபமான ஒன்றாக இருந்தது. ஆனால் அஜித் மெக்கானிக்காக தன்னுடைய வாழ்க்கை தொடங்கி சிறு, சிறு விளம்பரங்கள் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

ஆனால் இந்த இரு நடிகர்களுமே தங்களை சினிமாவில் நிலைநிறுத்திக் கொள்வதற்காக பல கடின உழைப்புகளை மேற்கொண்டனர். மேலும் ஒரு கட்டத்தில் இருவரும் நடித்த படங்களும் ரசிகர்களுக்கு பிடித்து போக கோடிக்கணக்கான ரசிகர்கள் இவர்களுக்கு உருவாகினார்கள்.
இந்நிலையில் நடிகர் விஜய்க்கு என்று தனியாக ரசிகர் பட்டாளமும், நடிகர் அஜித்துக்கு தனியாக ரசிகர் பட்டாளமும் உருவாகிய நிலையில், இருவரின் படங்களும் சில சமயத்தில் ஒரே ஆண்டில் வெளிவருவது வழக்கமாக இருந்தது. அச்சமயத்தில் அஜித் படங்கள் வெளியாகும் போது விஜய் ரசிகர்கள் கலாய்ப்பதும், விஜய் படம் வெளி வரும்போது அஜித் ரசிகர்கள் கலாய்ப்பதும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
மேலும் இந்த இரு ரசிகர்களுக்கும் இடையே உள்ள பகை, ஒரு கட்டத்தில் இரு நடிகர்களுக்கும் பகையை ஏற்படுத்தியது போன்ற ஒரு பிரதிபலிப்பை சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் ஏற்பட தொடங்கியது.
இதற்குக் காரணம் இந்த இரு நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்ததாக வெளிவரும் போதும் ஒருவரை பற்றி ஒருவர் பாடல்கள் மூலம் தாக்கி கொண்டார்கள். அது சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் இவர்கள் இருவருக்கும் உண்மையில் பிரச்சனை இருக்கிறது என மக்களும் நம்பினார்கள்.
எதிரியாக பார்த்த அஜித்தை நண்பராக்கிய விஜய்
ஆனால் சமீப காலமாக விஜய் தன்னுடைய படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் அஜித்தை பற்றி பேசுவதும், பல படங்களில் அஜித் நடித்த கதாபாத்திரத்தை பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில் தான் விஜய் தற்போது நடித்து வெளியாக இருக்கும் கோட் படத்தில் மங்காத்தா திரைப்படத்தில் வரும் “இந்த சரக்கை அடிக்கவே கூடாதுடா சாமி” என்ற வசனத்தை விஜய் பேசி இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அஜித் மற்றும் விஜய் இருவரும் நட்பாகவே இருக்கிறார்கள் முன்பு இருந்த பிரச்சினை தற்போது இல்லை என தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் மற்றும் அஜித் இருவரும் சேர்ந்து ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
