Connect with us

15 மணி நேரம் என்னையும் விஜய்யையும் தொடர்ந்து நடிக்க வைச்சாங்க!.. தூக்க கலக்கத்தில் நடித்த த்ரிஷா!..

vijay trisha

News

15 மணி நேரம் என்னையும் விஜய்யையும் தொடர்ந்து நடிக்க வைச்சாங்க!.. தூக்க கலக்கத்தில் நடித்த த்ரிஷா!..

Social Media Bar

Trisha vijay acting: நடிகர்கள் நடிப்பதற்காக இப்போது எல்லாம் சினிமாவில் ஏகப்பட்ட விஷயங்கள் செய்ய வேண்டியதாக இருக்கிறது. அவர்களுக்காக கேரவன் வண்டியை தயார் செய்வது, அவர்களுக்கு பல விருப்பமான விஷயங்களை செய்து கொடுப்பது மாதிரியான விஷயங்களை இயக்குனர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை பார்த்து பார்த்து பண்ண வேண்டியதாக உள்ளது.

ஆனால் முன்பெல்லாம் சினிமா படப்பிடிப்பு மிகவும் சிம்பிளாக இருந்தது. நடிகர்களும் இப்போதை விடவும் கடினமாக உழைத்தனர். உதாரணமாக இப்போதெல்லாம் விஜய் இரவு காட்சிகளில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. லியோ படத்திலேயே லோகேஷ் கனகராஜ் வேண்டி கேட்டுக்கொண்டதால் 20 நாட்கள் மட்டும் இரவு காட்சிகளை எடுத்துள்ளனர்.

ஆனால் முன்பெல்லாம் விஜயகாந்த் சத்யராஜ், ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் இருந்த காலகட்டங்களில் கேரவான் என்கிற வண்டியே சினிமாவில் கிடையாது. ஓய்வெடுக்க வேண்டும் என்றால் ஒரு நாற்காலியை போட்டு குடையை பிடித்துக் கொண்டு நடிகர்கள் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

இப்போது இரவு காட்சிகளில் நடிக்க மறுக்கும் விஜயே கூட முன்பெல்லாம் மிகவும் சீரியஸாக நடித்திருக்கிறார்.இது குறித்து திரிஷா ஒரு முறை பேட்டியில் பேசும் பொழுது கில்லி படத்தின் படப்பிடிப்பு நடந்த பொழுது அதில் துறைமுகத்தில் லைட் ஹவுஸில் திரிஷா மட்டும் விஜய் பேசிக்கொள்ளும் காட்சி ஒன்று இருக்கும். அந்த காட்சி எடுக்கப்படுவதற்கு முன்பு 15 மணி நேரம் ஏற்கனவே பட பிடிப்பு நடந்திருந்தது.

அதிகாலை முதல் இரவு வரை படப்பிடிப்பு நடந்து முடிந்த பிறகு தூங்கலாம் என்று கிளம்பிய போது இருவருக்கும் நடு இரவு இரண்டு மணிக்கு ஹார்பரில் ஒரு காட்சி இருக்கிறது. என கூறி எங்களை தூங்கவிடாமல் செய்துவிட்டார் இயக்குனர் தரணி என்று பேட்டியில் கூறியுள்ளார் திரிஷா.

அந்த படப்பிடிப்பில் இருவரது முகத்திலும் ரொமான்ஸ் வரவேண்டும் என கூறியுள்ளார் இயக்குனர். ஆனால் இருவரும் தூங்கி விழுந்துள்ளனர். இதனால் அந்த காட்சியை எடுத்து முடிப்பதற்கு வெகு நேரம் ஆகியுள்ளது. இதனை த்ரிஷா அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top