Tamil Trailer
ராட்சசன் மாதிரியான ஒரு சைக்கோ கில்லர் திரைப்படம்.. விஜய் ஆண்டனி நடிப்பில் மார்கன் ட்ரைலர் ரிலீஸ்..!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து மக்களுக்கு பிடித்த வகையில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி. அப்படியாக அவர் நடிக்கும் படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் அதிகமாக இருந்து வருகிறது.
ஏனோ சைக்கோ கில்லர் அல்லது க்ரைம் தில்லர் திரைப்படங்கள் மீது விஜய் ஆண்டனிக்கு அதிக ஆவல் இருந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்து விஜய் ஆண்டனி நடிப்பில் மார்கண் என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த திரைப்படத்தின் ட்ரைலர் தற்சமயம் வெளியாகியுள்ளது. படத்தின் கதைப்படி ஒரு சைக்கோ கில்லர் பலரையும் உடலை கருப்பாக்கி கொலை செய்கிறான். அதை விஜய் ஆண்டனி எப்படி கண்டறிகிறார் என்பதாக கதை செல்கிறது.
