இதெல்லாம் பண்ணும்போது செம கோபம் வரும்.. ரசிகர்கள் குறித்து விஜய் ஆண்டனி சொன்ன விஷயம்..!
தமிழில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் நடிகர் விஜய் ஆண்டனி மிக முக்கியமானவர்.
பொதுவாக எமோஷனலான காட்சிகள் என்பது விஜய் ஆண்டனிக்கு பெரிதாக நடிக்க வராது என்றாலும் கூட தொடர்ந்து விஜய் ஆண்டனி அவருக்கு தகுந்த மாதிரியான கதை களங்களை தேர்ந்தெடுத்து அதில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
அப்படியாக அவர் நடிக்கும் நிறைய படங்கள் நல்ல வெற்றியையும் பெற்றுக் கொடுத்திருக்கின்றன. இதனால் இதுப்பற்றி விஜய் ஆண்டனி ஒரு பேட்டியில் பேசும்போது அவரிடம் உங்கள் திரைப்படத்தில் எந்த படத்தை திரையரங்கில் பார்த்துள்ளீர்கள் என்று கேட்டனர்.

விஜய் ஆண்டனி சொன்ன விஷயம்:
அதற்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி இதுவரை நான் நடித்த எந்த ஒரு திரைப்படத்தையும் நான் திரையரங்கில் பார்த்ததே கிடையாது ஏனெனில் எனக்கு திரையரங்கில் இருக்கும் சின்ன இடையூறுகள் கூட கோபத்தை ஏற்படுத்தும்.
சிலர் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது செல்போன் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். சிலர் பேசிக் கொண்டிருப்பார்கள் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் என்னை அதிகமாக இடையூறு செய்யும். அதிக கோபத்தை ஏற்படுத்தும் அதனால் தான் நான் திரையரங்கிற்கு செல்வது கிடையாது என்று கூறியிருக்கிறார் விஜய் ஆண்டனி