Connect with us

இளையராஜாவின் அடுத்த ஸ்கெட்சில் சிக்கினாரா விஜய் ஆண்டனி!.. அடுத்த கலவரம் ரெடி..

News

இளையராஜாவின் அடுத்த ஸ்கெட்சில் சிக்கினாரா விஜய் ஆண்டனி!.. அடுத்த கலவரம் ரெடி..

Social Media Bar

இனி இளையராஜா பாடல்களை பயன்படுத்த வேண்டும் என்றாலே அதற்கு தமிழ் சினிமாவே யோசிக்க வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இளையராஜா அவரது இசைக்கு காப்புரிமையை அவருக்கே வழங்க வேண்டும் என பல காலங்களாக கேட்டு வருகிறார்.

அதன் மூலம் அவரது பாடலை யார் பயன்படுத்தினாலும் அதற்காக இளையராஜாவிற்கு பணம் தர வேண்டும். பாடகர்களே அந்த பாடல்களை மேடையில் பாடுவதற்கு பணம் தர வேண்டும் என்கிற நிலை வரும். எனவே இது ஒரு சர்ச்சையான விஷயமாகவே சென்று கொண்டுள்ளது.

மஞ்சுமல் பாய்ஸ் பிரச்சனை:

இதற்கு நடுவே மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் வெளியானப்போது அந்த திரைப்படத்தில் கண்மணி அன்போடு காதலன் என்கிற குணா பட பாடலை பயன்படுத்தியிருந்தனர். அந்த படம் வெளியானது முதலே அது பேசு பொருளாக இருந்தது,

ilayaraja
ilayaraja

ஆனால் அப்போதெல்லாம் ஒன்றும் கேட்காத இளையராஜா அந்த திரைப்படம் ஓ.டி.டிக்கு வந்த பிறகு அவரது அனுமதி இல்லாமல் படத்தில் பாடலை பயன்படுத்தியதற்காக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுப்பினார்.

ஆனால் அவர்கள் குணா படத்தின் தயாரிப்பாளரிடம் காசு கொடுத்துதான் பாடலை வாங்கியிருந்தனர். இந்த நிலையில் தற்சமயம் விஜய் ஆண்டனி இயக்கத்தில் அடுத்ததாக தயாராகி வருகிறது மழை பிடிக்காத மனிதன் என்கிற திரைப்படம்.

அடுத்து விஜய் ஆண்டனி:

இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதில் உறவுகள் தொடர்கதை என்னும் அவள் அப்படிதான் திரைப்படத்தில் வரும் பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த பாடலை இளையராஜாதான் இசையமைத்து உள்ளார்.

எனவே படம் வெளியாகும் வரை அமைதியாக இருந்துவிட்டு பிறகு இதற்காக இளையராஜா பிரச்சனைச் செய்வதற்கு வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

To Top