Tamil Cinema News
ரஜினி சாருக்கு 6 படம் தொடர் தோல்வி.. மேடையில் ஓப்பனாக கூறிய தெலுங்கு நடிகர்..!
தமிழ் சினிமாவில் எப்போதுமே வரவேற்பை இழக்காத ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். என்னதான் தமிழ் சினிமாவில் நிறைய பெரும் நடிகர்கள் வந்துவிட்டாலும் கூட இன்னமும் ரஜினிகாந்துக்கு இருக்கும் மவுஸ் என்பது குறையவில்லை என்று தான் கூற வேண்டும்.
ரஜினிகாந்த் இப்போதும் 300 கோடிக்கும் அதிகமாக தான் வசூல் சாதனை செய்து வருகிறார். ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அதிக வசூல் கொடுத்த படங்கள் என்று லிஸ்ட் எடுத்தால் அதில் ரஜினிகாந்தின் திரைப்படங்கள்தான் அதிகமாக இருக்கும்.
தெலுங்கு நடிகர் சொன்ன விஷயம்:
அந்த அளவிற்கு முக்கிய நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார் ரஜினிகாந்த் சினிமாவில் என்னதான் பெரிய நடிகராக இருந்தாலும் அவருக்கும் சில தோல்வி படங்கள் இருந்திருக்கின்றன.
இதனை சுட்டிக்காட்டி சமீபத்தில் விஜய் தேவரகொண்டா ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது தமிழ் சினிமாவில் ரஜினி சாரே தொடர்ந்து ஆறு திரைப்படங்கள் தோல்வி படங்களாக கொடுத்துள்ளார்.
எனவே யாருக்குமே இங்கே வெற்றி உறுதியான ஒரு விஷயம் கிடையாது என்று கூறியிருந்தார். இதனை கேட்ட ரசிகர்கள் எப்போது ரஜினிகாந்த் 6 திரைப்படங்கள் வரிசையாக தோல்வி கொடுத்தார். ரஜினிக்கு பாபா கோச்சடையான் மாதிரியான சில திரைப்படங்கள் தோல்வியை கொடுத்திருப்பது உண்மைதான்.
ஆனால் எந்த காலகட்டத்திலும் ரஜினிகாந்த் தொடர்ந்து ஆறு திரைப்படங்கள் தோல்வி கொடுத்ததே கிடையாது என்று பதில் அளித்து வருகின்றனர்.