வெங்கட் பிரபுவை அசிங்கமாக திட்டிய தளபதி ரசிகர்!.. பதிலுக்கு பழி வாங்கிய வெங்கட் பிரபு!..

Director Vengat Prabhu: பெரும் நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கும் தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெங்கட் பிரபு. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களில் அதிகப்பட்ச திரைப்படங்கள் வெற்றியையே கொடுத்துள்ளன.

மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் அதிகரித்தன. இந்த நிலையில் தற்சமயம் விஜய்யை வைத்து கோட் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் நடிகர் விஜய்.

Social Media Bar

கோட் திரைப்படம் குறித்து இப்போதுவரை பெரிதாக அப்டேட் என எதுவும் வரவில்லை. பொதுவாக அஜித் படத்திற்குதான் இந்த மாதிரியான சம்பவங்கள் நிகழும். இந்த முறை விஜய் படத்திற்கு இப்படி அப்டேட் கிடைக்காமல் இருப்பது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் ரசிகர் செய்த வேலை:

இதனை தொடர்ந்து ரசிகர் ஒருவர் கடும் கோபத்தில் வெங்கட் பிரபுவை திட்டி அப்டேட் போடும்படி கேட்டிருந்தார். அதனை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த வெங்கட் பிரபு. நானும் அப்டேட் விடலாம்னுதான் நினைச்சேன். இப்போ இதுக்கு மேலே எப்படினு நீங்களே சொல்லுங்க என பதிவிட்டு அதற்கு அருகே விஜய்னா ப்ளட்ஸ் என்றும் பதிவிட்டுள்ளார்.

இதன் மூலமாக நேரடியாக விஜய் ரசிகர்களை பழி வாங்கியுள்ளார் வெங்கட் பிரபு. ஆனால் அவர் காமெடிக்காக எல்லாம் அப்படி செய்ய கூடியவர் அதனால் கண்டிப்பாக அப்டேட் கொடுப்பார் என்றும் ஒரு பக்கம் பேசப்படுகிறது.