News
மொத்த வீடும் இடிந்து மனம் நொறுங்கிய குடும்பம்.. அரசியல் கட்சிகளே கண்டுக்காதப்போது கை கொடுத்த தளபதி!..
Actor Vijay: தமிழ் சினிமா நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குபவர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து விஜய் தொடர்ந்து நல்ல படங்களை கொடுப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் அரசியலிலும் கால் பதிப்பதற்கான முயற்சிகளை விஜய் எடுத்து வருகிறார். இதனை தொடர்ந்து இந்த வருடம் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். தற்சமயம் திருநெல்வேலி மாவட்டத்தில் சென்னையை விடவும் பெரும் மழை உருவாகி அதனால் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானது.

இது அனைவரும் அறிந்த செய்தியே. சென்னையில் உள்ள மக்களுக்கு உதவுவதற்காக நிறைய நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் உதவி செய்ய வந்தன. ஆனால் திருநெல்வேலி பக்கம் அந்த அளவிற்கு உதவிகள் வந்து சேரவில்லை இந்த நிலையில் நேற்று முன்தினம் கேப்டனின் இறப்பிற்கு வந்த விஜய் அதற்கு மறுநாளே திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்று அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கொடுத்து வந்தார்.
அதில் ஒரு ஒரு குடும்பத்திற்கு மட்டும் பெரும் உதவியை செய்து இருக்கிறார் விஜய். திருநெல்வேலியில் வெள்ளம் ஏற்பட்ட வீடியோக்கள் வெளியாகி கொண்டிருந்த பொழுது அதில் ஒரு வீடு இடிந்து விழுந்த ஒரு வீடியோ மிகவும் பிரபலமாகி வந்தது வெள்ளப் போக்கின் காரணமாக ஒரு மாடி வீடு மொத்தமாக இடிந்து போனது.
அதனை தொடர்ந்து அந்த வீட்டின் குடும்பத்தார் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தனர். ஆனால் அரசாங்கம் அவர்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. இந்நிலையில் திருநெல்வேலிக்கு நிவாரண பொருட்களை வழங்குவதற்கு சென்ற விஜய் அந்த குடும்பத்தாருக்கு ஒரு காசோலையை வழங்கியுள்ளார். அதை வாங்கிய குடும்பத்தார் கண் கலங்கி நின்று உள்ளனர் அந்த வீடியோ தற்சமயம் ட்ரெண்டாகி வருகிறது.
