News
விஜய்க்கு ரசிகர் லிப் கிஸ் கொடுத்த விவகாரம்!.. உண்மையிலேயே அது விஜய்தானா?..
நடிகர் விஜய் கட்சி துவங்கியது முதலே அவரை குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகின்றன. அதில் முக்கியமாக தற்சமயம் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் கேரளா சென்றது முதலே அது தொடர்பான வீடியோக்கள் தினமும் வெளியாகி வருகின்றன.
விஜய்யும் ஒவ்வொரு இடத்திற்கும் படப்பிடிப்புக்கு செல்லும் பொழுது அங்குள்ள மக்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்து விடுகிறார். இதனால் தினசரி விஜய் குறித்த வீடியோக்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில் மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவனை சந்தித்து கட்டி அணைத்து வீடியோ வெளியிட்டிருந்தார் விஜய். இந்த நிலையில் இதே போல வெளியான ஒரு வீடியோ ஒன்று கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

அதாவது நடிகர் விஜய்க்கு பலரும் உணவு ஊட்டுவது போல இருந்த அந்த வீடியோவில் ஒரு நபர் மட்டும் விஜய்யை பிடித்து முத்தமிட்டு விட்டார் இந்த வீடியோ வைரலாகி இதுக்குறித்து பேச்சுக்கள் இருந்து வந்த நிலையில் தற்சமயம் அந்த வீடியோவில் இருந்தது விஜய் கிடையாது என்று கூறப்படுகிறது.
அது கன்னட நடிகர் துனியா விஜய் என்கிற நபரின் வீடியோ அவர் ஒரு முறை அனைவரையும் தனக்கு உணவு ஊட்டுமாறு கோரி வீடியோ எடுத்த பொழுது ஒரு நபர் செய்த வேலை தான் அது அவர் பார்ப்பதற்கு விஜய் போல இருப்பதால் அந்த வீடியோவை எடுத்து இப்பொழுது ட்ரெண்ட் செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
