Connect with us

இன்னும் இரண்டு மாசத்தில் என் அரசியல் பயணம் துவங்கும்!.. இந்த முறை போட்டியிடவில்லை!.. அறிக்கை வெளியிட்ட விஜய்!..

vijay politics

Latest News

இன்னும் இரண்டு மாசத்தில் என் அரசியல் பயணம் துவங்கும்!.. இந்த முறை போட்டியிடவில்லை!.. அறிக்கை வெளியிட்ட விஜய்!..

Vijay Politics Entry : கடந்த சில தினங்களாகவே விஜய்யின் அரசியல் பயணம் குறித்த பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு கொண்டு இருந்தன. லியோ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய்யும் தொடர்ந்து அரசியல் சார்ந்த பல விஷயங்களை செய்து வந்தார்.

பொது மக்களுக்கு நன்மைகளை செய்தல் அடிக்கடி பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு போன்ற பல விஷயங்கள் நடந்து கொண்டிருந்தன. விஜய் கட்சி துவங்கப் போகிறார் என்பது கடந்த ஒரு மாதமாகவே பேசு பொருளாக இருந்து வந்தது. கட்சிக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார் என்பது பெரும் சர்ச்சையாக இருந்து வந்தது.

இதற்கு நடுவே தமிழக முன்னேற்ற கழகம் என்பதுதான் விஜய்யின் கட்சியின் பெயர் என்று ஒரு வதந்தியும் பரவி வந்தது. இந்த நிலையில் கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிய விஜய் இன்று அது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

சொல்லப்போனால் அரசியல் சார்ந்து விஜய் வெளியிட்டிருக்கும் முதல் அறிக்கை இது எனது கூறலாம். அதன்படி அந்த அறிக்கையின் படி விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு நலத்திட்டங்களையும் சமூக சேவைகளையும் செய்து வந்திருக்கிறது. இருந்தாலும் அதை தாண்டி பெரிதாக ஒன்றை செய்வதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

சாதி மத பேதங்கள் வாயிலாக மக்களை பிளவுபடுத்த துடிக்கும் பிளவுவாத அரசியல் கலாச்சாரம் இருக்கும் இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு ஒரு புது தலைவர் வரமாட்டாரா என்று மக்கள் ஏங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது இந்த நிலையில் மக்களின் அன்பும் அபிமானமும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் அதனை சாத்தியப்படுத்த முடியும்.

எனவே 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழி வகுப்பது தான் நமது இலக்கு. இன்னும் இரண்டு மாதங்களில் கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகள் கொடி சின்னம் முதலியவைகளை முன்வைத்து மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன் தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும் எனக் கூறியுள்ளார் விஜய் 

அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் என்கிற பெயரில் கட்சியை துவங்கி இருக்கிறார் விஜய். இந்த கட்சியானது தற்சமயம் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது என்றும் எந்த கட்சிக்கும் ஆதரவாகவும் நிற்காது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக விஜய் கூறியுள்ளார். எனவே 2026 இல் நடக்கும் சட்டமன்றத் தேர்தலை கணக்கு வைத்துதான் விஜய் இந்த கட்சியை துவங்கி இருக்கிறார். இதனை அடுத்து பலரிடமிருந்தும் விஜய்க்கு ஆதரவுகள் வந்து கொண்டிருக்கிறது 

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
manimegalai vj vishal
To Top