Connect with us

அடுத்து கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி போடும் விஜய்!.. பேட்ட லெவலுக்கு ஒரு படமாம்!..

vijay karthik subbaraj

News

அடுத்து கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி போடும் விஜய்!.. பேட்ட லெவலுக்கு ஒரு படமாம்!..

Social Media Bar

Actor Vijay : படங்களை தேர்ந்தெடுப்பதில் தற்சமயம் விஜய் நல்ல அறிவு பெற்றுவிட்டார் என்பதே ரசிகர்களின் பேச்சாக இருக்கிறது. ஏனெனில் சமீபத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படங்கள் அனைத்துமே நல்ல வெற்றியை பெரும் வகையிலான கதையைக் கொண்டிருக்கின்றன. வாரிசு மட்டுமே கொஞ்சம் சாதாரண கதையாக இருந்தாலும் அந்த திரைப்படமும் நல்ல வசூலைதான் கொடுத்தது.

எனவே விஜய் கதையை தேர்ந்தெடுக்கும் பொழுது அவை மக்களுக்கு பிடித்த வகையில் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு தேர்ந்தெடுக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு திரைப்படம் நடிக்கும்போதும் அந்த படத்தின் பாதி படம் முடியும்போது அடுத்த படத்தில் கமிட் ஆகிவிடுவார் விஜய்.

vijay1
vijay1

அந்த வகையில் தற்சமயம் கோட் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் அடுத்ததாக யார் திரைப்படத்தில் நடிக்க போகிறார் என்கிற கேள்வி இருந்து வந்தது. இந்த நிலையில் இது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்தான் அடுத்த திரைப்படம் நடிக்க இருக்கிறார் விஜய் என்று கூறப்படுகிறது.

பேட்ட திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் விஜய்யை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். அதற்கு தகுந்தார் போல தற்சமயம் அவர் இயக்கத்தில் வந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது.

இதனை அடுத்து விஜய் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு பயங்கர மாஸ் சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். எனவே கார்த்திக் சுப்புராஜ் அப்படியான ஒரு கதையை எழுதி வருவதாக கூறப்படுகிறது. அந்த படம் வெளியாகும் பட்சத்தில் கிட்டத்தட்ட ரஜினியின் பேட்ட திரைப்படத்திற்கு சமமான ஒரு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

To Top