Connect with us

கமல் படத்துல  நடிக்க போன என்னை நிராகரிசுட்டாங்க! நடிகர் விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ!

actor kamal and vijay sethupathi

News

கமல் படத்துல  நடிக்க போன என்னை நிராகரிசுட்டாங்க! நடிகர் விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ!

Social Media Bar

இந்தியளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் உலகநாயகன் கமல் படத்திற்கான ஆடிஷனில் கலந்துகொண்டது பற்றியும் அந்த ஆடிஷனில் தான் நிராகரிக்கப்பட்டது பற்றியும் பேசியிருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

துபாயில் வேலை செய்து வந்த விஜய் சேதுபதி, நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் அந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க முயற்சிக்க துவங்கினார். பல தயாரிப்பு நிறுவனங்களிடமும், இயக்குனர்களிடமும் வாய்ப்பு கேட்டு வந்த விஜய் சேதுபதி, ஹீரோவாக மட்டுமே தான் நடிப்பேன் என இல்லாமல் எந்த காப்பாத்திரமாக இருந்தாலும் தைரியமாக நடிக்க தாயாராக இருந்தார். 

புதுப்பேட்டை, எம்.குமரன் மாதிரியான திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படம் மூலம் ஹீரோ வாக அறிமுகமானார். பின்னர், பிட்சா, சூத்து கவ்வும், நானும் ரவுடி தான், என ஹீரோவாக தொடர் வெற்றிகளை குவித்தது மட்டுமில்லாமல், வில்லன், கேமியோ ரோல்கள் என பல கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகரிகளிடையே நீங்கா இடம் பிடித்துவிட்டார். 

இந்த நிலையில், தனது ஆரம்ப கால சினிமா அனுபவம் குறித்து இவர் பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான நம்மவர் என்ற திரைப்படத்தில் கல்லூரி படிக்கும் மாணவர்களாக நடிக்க பலர் ஆடிஷன் செய்யப்பட்டுள்ளனர்.கமலின் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசையில் விஜய் சேதுபதி அந்த ஆடிஷனுக்கு சென்றுள்ளார். ஆனால், பார்க்க சின்ன பையன் போல இருப்பதாக கூறி விஜய் சேதுபதியை ஆடிஷனில் இருந்து நிராகரித்துவிட்ததாக அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். 

ஆனால்,  பல வருடங்கள் கழித்து அதே உலகநாயகன் கமல்ஹாசனுடன் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளதே அவர் வெற்றிக்கு அடையாளம். 

To Top