வன்முறைக்கு ஆதரவான திரைப்படமா டி.எஸ்.பி? – ட்ரைலரால் கிளம்பிய சர்ச்சை.!

இந்திய அளவில் காவல் வன்முறை என்பது மாதந்தோறும் நடந்து வருகிறது. லாக்கப் இறப்புகள் என பல வகையான காவலர் அத்துமீறல்களை அனுதினமும் பார்த்து வருகிறோம். விசாரணை திரைப்படம் அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்ட்டாக இருந்து வரும்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்து பொன்ராம் இயக்கிய டி.எஸ். பி திரைப்படத்தின் ட்ரைலர் தற்சமயம் வெளியானது. படத்தின் ட்ரைலர் மிகவும் சுமார் ரகத்தில் உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். வழக்கமான போலீஸ் கதைகளத்தை கொண்டே விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே சேதுபதி என்னும் படத்தில் போலீஸாக நடித்துள்ளார்.

எனவே இந்த படத்தின் தன்னை எப்படி வித்தியாசப்படுத்தி காட்டிக்கொள்ள போகிறார் என்கிற கேள்வியும் உள்ளது. பொதுவாக தமிழ் சினிமாவில் காவலர்கள் அத்திமீறுவதையும், பொதுமக்களை அடிப்பதையும் ஒரு கெத்தாக காட்டுவதை நாம் பார்க்க முடியும்.

இது தொடர்ந்து காவலர்களை வன்முறைக்கு ஊக்குவிக்கிறதோ? என்கிற கருத்து பலரிடம் நிலவி வருகிறது. இந்த நிலையில் அதே மாதிரி ஒரு படமாகவே வந்திருக்கும் டி.எஸ்.பி படமும் அந்த படங்கள் ரகத்தில்தான் இருக்குமோ? என்கிற சந்தேகம் ஒரு சாராருக்கு வந்திருக்கிறது.

ஆனால் அதே சமயம் பலருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் பிடித்துள்ளது. விஜய் சேதுபதி ரசிகர்கள் இந்த படத்திற்காக காத்துக்கொண்டுள்ளனர். வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.

Refresh