Tamil Cinema News
ஆஸ்கர் இயக்குனருடன் சேரும் விஜய் சேதுபதி.. மகாராஜாவால் வந்த அங்கீகாரம்.!
தமிழ் சினிமாவில் மோசமான திரைப்படங்கள் முதல் நாளே வரவேற்பை இழந்து வெற்றி வாய்ப்பை இழக்கின்றன. இது பல தயாரிப்பாளர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. எனவே அவர்கள் தொடர்ந்து திரைப்படங்களை யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என கூறி வருகின்றனர்.
ஆனால் அதே சமயம் நல்ல படங்கள் பெரிதாக விளம்பரம் இல்லை என்றாலும் கூட நன்றாக இருக்கும் பட்சத்தில் மக்கள் மத்தியில் எளிதாக பிரபலமடைகிறது. சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் கூட அப்படியான ஒரு படமாகதான் இருந்தது.
இந்த நிலையில் அதே போல போன வருடம் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் முக்கிய படமாக இருந்தது. ஏற்கனவே திரையில் வரவேற்பை பெற்ற மகாராஜா நெட்ஃப்ளிக்ஸில் வெளியான பிறகு உலக அளவில் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இந்த படம் சீனாவில் வெளியாகி அங்கேயும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அதில் வில்லனாக நடித்த பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பிற்கு ஹாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஹாலிவுட்டில் ரெவணண்ட் மாதிரியான படங்களை இயக்கி ஆஸ்கர் விருது வாங்கியவர் இயக்குனர் அலெஜாண்ட்ரோ கோன்சாலஸ் இன்யாரிட்.
இவர் அடுத்து இயக்கும் திரைப்படத்தில் அனுராக் காஷ்யப்பிற்கு வாய்ப்பு தருவதாக கூறப்படுகிறது.மேலும் விஜய் சேதுபதிக்கும் அடுத்து அவர் எடுக்கவிருக்கும் படத்தில் வாய்ப்பு தர இருப்பதாக பேச்சுக்கள் உள்ளன.
![](https://cinepettai.com/wp-content/uploads/2023/10/logolow-4.png)