ஜெய்பீம் திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மணிகண்டன். தமிழ் சினிமாவில் பல துறைகளிலும் பணியாற்றி வந்த மணிகண்டனுக்கு ஜெய்பீம் திரைப்படத்திற்கு முன்பே பட வாய்ப்புகள் கிடைத்தது.

அப்படியாகதான் அவர் விக்ரம் வேதா, ககபோ போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் ஜெய் பீம் திரைப்படத்தில் அந்த பழங்குடியின கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்பது இயக்குனரின் எண்ணமாக இருந்தது.

அப்படியாக அந்த திரைப்படத்தில் நடித்தார் மணிகண்டன். ஆனால் அந்த திரைப்படம் அவரின் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது. அதற்கு பிறகுதான் குட் நைட் திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது.

Read More:  நான் ரொம்ப ஆடிப்போன காட்சி அது.. விஜய் சேதுபதியை பிரமிக்க வைத்த திரைப்படம்..!
actor-manikandan
actor-manikandan
Social Media Bar

அதனை தொடர்ந்து அவர் லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் விஜய் சேதுபதியுடன் அவரது அறிமுகம் குறித்து விஜய் சேதுபதி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதில் அவர் கூறும்போது விஜய் சேதுபதி அண்ணனை ககபோ திரைப்படத்தில் நடித்தப்போது எனக்கு விஜய் சேதுபதியுடன் பேசுவதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை.

ஒரு முறை மழை பெய்யும்போது அவருடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் அவரிடம் பேசியபோது நின்று கேட்டுக்கொண்டிருந்த விஜய் சேதுபதி பிறகு பல மணி நேரங்கள் என்னிடம் பேசி வந்தார். அப்போது எனது தங்கைக்கு சின்ன சிகிச்சை ஒன்று செய்ய வேண்டி இருந்தது.

Read More:  எல்.சி.யு உருவாக முக்கிய காரணமே இந்த இயக்குனர்தான்.. உண்மையை கூறிய லோகேஷ்..!

அதற்கு பண உதவி செய்து உதவினார் விஜய் சேதுபதி, மேலும் பிறகு என்னுடைய தங்கச்சிக்கு திருமணம் நடந்தது. அதற்கு நான் அழைக்காமலே வந்த விஜய் சேதுபதி எனக்கு 3 லட்ச ரூபாயை கையில் கொடுத்து சென்றார். அப்போது அந்த பணம் இல்லை என்றால் பெரிய பண நெருக்கடியில் சிக்கியிருப்பேன் என கூறியுள்ளார் மணிகண்டன்.

 

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.