Connect with us

1000 கோடி வசூலை நோக்கி நகரும் மகாராஜா… சத்தமில்லாமல் சம்பவம் செய்த விஜய் சேதுபதி..!

vijay sethupathi maharaja

Tamil Cinema News

1000 கோடி வசூலை நோக்கி நகரும் மகாராஜா… சத்தமில்லாமல் சம்பவம் செய்த விஜய் சேதுபதி..!

Social Media Bar

Actor Vijay Sethupathi’s recently released movie Maharaja. The movie got a bigger response than expected. Maharaja is the next 1000 crore film

இந்த வருடம் வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற ஒரு சில திரைப்படங்களில் மகாராஜா திரைப்படம் முக்கியமான திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்தார்.

இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மொத்தமே 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில்தான் எடுக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே 110 கோடி ரூபாய்க்கு ஓடி பெரும் வரவேற்பை பெற்றது விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம்.

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியான மகாராஜா திரைப்படம் உலக அளவில் நிறைய வரவேற்பை பெற்றது. அமெரிக்கா மாதிரியான வளர்ந்த நாடுகளில் இருக்கும் மக்களே இந்த படத்திற்கு அதிகமாக ஆதரவு கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

விஜய் சேதுபதியின் மகாராஜா:

இதனைத் தொடர்ந்து திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது மகாராஜா திரைப்படம். இப்படியாக சீன திரைப்பட விழாவில் வெளியான மகாராஜா படத்திற்கு சீன மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் அடுத்து சீனாவிலும் மகாராஜா திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.

பொதுவாகவே ஒரு படம் சீனாவில் வெளியாகிறது என்றால் அங்கு அதிக வசூல் பெற்றுக் கொடுக்கும். ஏனெனில் இந்தியாவில் இருக்கும் அதே அளவிலான மக்கள் தொகை சீனாவில் இருக்கிறது. மேலும் இந்தியாவை விட அங்கு திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகம்.

maharaja

maharaja

தங்கல், சீக்ரெட் சூப்பர் ஸ்டார் மாதிரியான ஹிந்தி திரைப்படங்கள் சீனாவில் வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை பெற்று கொடுத்தது பெரும்பாலும் சீனாவில் வெளியாகும் திரைப்படங்கள் அதிக வசூலை பெற்று கொடுப்பது இயல்பான விஷயமாகும்.

சீனாவில் ரிலீஸ்:

ஏற்கனவே திரைப்பட விழாக்கள் மூலமாக மகாராஜா திரைப்படத்திற்கு அங்கு அதிக வரவேற்பு இருந்து வருவதால் அடுத்து திரையரங்குகளில் வெளியாகும் போது இந்த படத்திற்கு நிறைய வரவேற்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் மகாராஜா திரைப்படம் சீன மொழியில்தான் வெளியாக இருக்கிறது.  மகாராஜா திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து விட்டால் அது விஜய் சேதுபதிக்கு பெரிய விஷயமாக அமைந்துவிடும். மேலும் தமிழ்நாட்டில் இதுவரை பெரிய பெரிய நடிகர்கள் படம் கூட ஆயிரம் கோடி ரூபாய் வசூல் சாதனையை தொடவில்லை எனும் பொழுது மகாராஜா அந்த இடத்தை தொட்டது என்றால் அது தமிழக சினிமாவிற்கே ஒரு பெருமையாக அமையும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

To Top