News
எப்படி தமிழை வாழவச்சோம் பார்த்தியா!.. அறிக்கையில் சிதறவிட்ட விஜய்!..
விஜய் அரசியல் கட்சி துவங்குகிறார் என்பது பல காலங்களாகவே பேசப்பட்டு வந்த விஷயமாகும். ரஜினிகாந்த் மாதிரியே இவரும் பேசி கொண்டிருப்பாரே தவிர கட்சி துவங்கமாட்டார் என பலரும் நினைத்து வந்த நிலையில் திடீரென கட்சி துவங்கினார் நடிகர் விஜய்.
தமிழக வெற்றி கழகம் என்பது கட்சி பெயராக இருந்தது. அந்த கட்சி பெயர் தொடர்பாகவே அப்போது இரண்டு சர்ச்சைகள் வெடித்தன. அதில் ஒன்று தமிழகம் என்கிற பெயர். தமிழர்களின் நாடு என பொருள்படும் வகையில்தான் இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒன்றிய அரசு அதை நீர்த்து போக செய்யும் விதமாக தமிழகம் என்றே அழைத்து வருகிறது. அந்த சொல்லையே விஜய்யும் தனது கட்சிக்கு பயன்படுத்தி இருப்பது சரியா என கேள்வி எழுந்தது. அதன் பிறகு தமிழக வெற்றி கழகத்தில் க் வரவேண்டிய இடத்தில் வரவில்லை என்பது பெரும் குறையாக பேசப்பட்டது.

மேலும் அவர் வெளியிட்ட முதல் அறிக்கையில் இருந்த தவறுகளை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வந்தனர். அதில் தேதி கூட போடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்சமயம் விஜய் கட்சியில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அது சுத்தமான தமிழில் எந்த ஒரு தவறும் இல்லாமல் எழுதப்பட்டுள்ளது.
மேலும் அதில் தமிழக வெற்றிக் கழகம் என க் சேர்த்து எழுதப்பட்டுள்ளது. நல்ல தமிழ் தெரிந்த யாரையோ விஜய் வேலைக்கு அமர்த்திவிட்டார் என்று இதுக்குறித்து பேசி வருகின்றனர்.
