Connect with us

விஜய் மகன் இயக்கும் படம் அஜித் கூடவா!.. சீக்ரெட்டை கண்டுப்பிடிச்சாச்சு!..

Cinema History

விஜய் மகன் இயக்கும் படம் அஜித் கூடவா!.. சீக்ரெட்டை கண்டுப்பிடிச்சாச்சு!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் விஜய் அஜித்திற்கு பிறகு அதே போல மாஸ் ஹீரோக்களாக இருப்பவர்கள் அஜித்தும், விஜய்யும். அஜித், விஜய் இருவரின் படங்களுக்குமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அதே போல இவர்கள் இருவரும் வெகு காலங்களாக போட்டி நடிகர்களாக இருந்து வருகின்றனர்.

கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் கூட போட்டி போட்டுக்கொண்டே வெளியாகின.அதற்கு அடுத்து விஜய் லியோ படத்தில் கமிட் ஆகி அதன் முக்கால்வாசி வேலைகள் முடிந்துவிட்டன.

ஆனால் அஜித் நடிக்கவிருந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பே இன்னும் துவங்கவில்லை. இந்த படத்தை லைகா நிறுவனம்தான் தயாரிக்க இருந்தது. இந்த நிலையில் தற்சமயம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய்யின் மகனான ஜேசன் விஜய் படம் இயக்கவுள்ளார்.

இந்த படத்தை பற்றி இன்னும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ஆனால் டிவிட்டரில் லைகா நிறுவனம் இந்த செய்தியை பகிரும்போது அதில் சுரேஷ் சந்திராவையும் குறிப்பிட்டுள்ளது. சுரேஷ் சந்திரா வேறு யாருமில்லை. அவர் அஜித்தின் மேனாஜர் ஆவார்.

அஜித் படங்களுக்கு தேதி ஒதுக்குவது போன்ற வேலைகளை இவர்தான் செய்கிறார். மகிழ் திருமேணி இயக்கவிருக்கும் அஜித் படத்தை இப்போது இயக்காமல் அதற்கு பதிலாக ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் அஜித்தை நடிக்க வைக்க திட்டம் இருக்கிறது. எனவேதான் அஜித்தின் மேலாளரை இதில் குறிப்பிட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

அதே சமயம் சுரேஷ் சந்திரா பல நடிகர்களுக்கு ப்ரோமோஷன் வேலைகளையும் செய்து வருகிறார். எனவே அதற்காக கூட அவரை மென்ஷன் செய்திருக்கலாம் எனவும் பேச்சுக்கள் உள்ளன.

To Top