Connect with us

கதையே இல்லாத படத்துல எப்படியா நடிச்ச!.. விஜய்யை பார்த்து ஆச்சரியப்பட்ட இயக்குனர்!..

Thalapathy vijay

Cinema History

கதையே இல்லாத படத்துல எப்படியா நடிச்ச!.. விஜய்யை பார்த்து ஆச்சரியப்பட்ட இயக்குனர்!..

Social Media Bar

Actor Vijay : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் விஜய் இருக்கிறார். தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு அதிக சம்பளம் வாங்குபவர் நடிகர் விஜய்தான். இவருக்கு தொடர்ந்து சினிமாவில் நடிப்பதிலேயே இப்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அரசியலுக்கு சென்றுள்ள விஜய் கமிட்டாகி இருக்கிற ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்துவிட்டு அதற்கு மேல் புது படங்களில் நடிக்க போவதில்லை. தொடர்ந்து அரசியலில் ஈடுபட போகிறேன் எனக் கூறியிருக்கிறார்.

Thalapathy-vijay
Thalapathy-vijay

இது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒரு செய்தியாக அமைந்துள்ளது. ஏனெனில் விஜய் அரசியலுக்கு வந்தாலும் கூட தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பார் என்று ரசிகர்கள் நம்பி வந்தனர்.

ஆனால் தற்சமயம் விஜய் நடிக்க மாட்டார் என்று கூறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் தமிழ் சினிமாவில் எவ்வளவோ தோல்விகளை கண்டபோது கூட சினிமாவை விட்டு சென்றது கிடையாது. பலமுறை அவருக்கு படங்கள் தோல்வி அடைந்துள்ளன அப்போதெல்லாம் திரும்ப ஏதாவது ஒரு படம் பெரிய ஹிட்டை கொடுக்கும்.

அப்படியாக விஜய் நடித்து வெளியான திரைப்படம் தான் குஷி. குஷி திரைப்படத்திற்கு முன்பு சில படங்கள் ஒழுங்காக ஓடாத காரணத்தினால் விஜய் கவலையில் இருந்தார். அப்பொழுது அவரது மார்க்கெட்டை மீண்டும் உயர்த்தியது குஷி திரைப்படம் தான்.

இது குறித்து ஒரு மேடையில் விஜய் பேசும் பொழுது அவரிடம் பேசிய இன்னொரு இயக்குனர் குஷி திரைப்படத்தின் கதையை எப்படி ஒப்புக்கொண்டீர்கள். அந்த திரைப்படத்தில் முதலில் கதையே இல்லையே என்று கேட்டிருக்கின்றனர். அப்பொழுது அதற்கு பதில் அளித்த விஜய் எஸ்.ஜே சூர்யா என்று ஒருவர் இருக்கிறார்.

அவரிடம் நீங்கள் கதை கேட்டீர்கள் என்றால் எந்த கதையாக இருந்தாலும் அதை ஒப்புக்கொள்வீர்கள். அப்படி திரை கதையை விரிவாக சொல்லக்கூடியவர் அவர் என்று எஸ்.ஜே சூர்யாவை புகழ்ந்து பேசி இருந்தார் விஜய்.

To Top