News
ரஜினி டயலாக் தான் என் திரையுலக வாழ்க்கையை மாத்துனுச்சு!.. சீக்ரெட்டை ஓப்பன் செய்த நடிகர் விஜய்!..
தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான நடிகர்களில் மிக முக்கிய பிரபலமாக பார்க்கப்படுபவர் நடிகர் விஜய். பெரும்பாலும் விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. இதனால் அவை பெரும் வெற்றியை கொடுத்து விடும் என்று கூறலாம்.
ஒரு காலகட்டத்தில் விஜய் இளமையாக இருந்த பொழுது அவர் ரஜினிக்கு எல்லாம் போட்டி நடிகராக வருவார் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஆனால் இப்பொழுது ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிய நடிகர் என்றால் விஜய் என்கிற நிலை ஏற்பட்டு உள்ளது.
விஜய் தனது தந்தையின் துணையோடு சினிமாவில் வந்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டார் என்று தான் கூற வேண்டும். முதல் திரைப்படத்திலேயே அவரை யாரும் கதாநாயகனாக ஏற்றுக்கொள்ளவில்லை.
துவண்டு போகாத விஜய்:
இருந்தாலும் துவண்டு போகாமல் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல தோல்விகளை கண்ட பிறகும் அதில் நடித்துக் கொண்டே இருந்தார் விஜய் ஒரு கட்டத்தில் அவருக்கான அங்கீகாரம் என்பது தமிழ் சினிமாவில் கிடைக்க துவங்கியது. நாளைய தீர்ப்பு திரைப்படத்தில்தான் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விஜய்.

இந்த திரைப்படத்தை அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர்தான் இயக்கினார் ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. மேலும் விஜய்யையும் யாரும் கதாநாயகனாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதனை தொடர்ந்துதான் விஜயகாந்த் உதவியுடன் செந்தூரபாண்டி திரைப்படத்தில் விஜயகாந்திற்கு மகனாக நடித்தார் விஜய்.
அதற்கு பிறகு விஜய் நடித்த ரசிகன் திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரும் வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற துவங்கினார் விஜய். இந்த நிலையில் ஒரு பேட்டியில் முதன்முதலாக உங்கள் தந்தையிடம் எப்படி வாய்ப்பை வாங்கினீர்கள் என்று விஜய்யிடம் கேட்கப்பட்டது.
படிப்பு வரவில்லை:
அதற்கு பதில் அளித்த விஜய் கூறும் பொழுது எனக்கு படிப்பு அவ்வளவாக வரவில்லை. பத்தாவது முடித்த பிறகு எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்கிற பயம் இருந்து கொண்டு இருந்தது. அப்போதுதான் மெல்ல சினிமா மீது எனக்கு ஆர்வம் வந்தது.

சரி நடிக்கலாம் என்று சென்ற பொழுது அதற்கு எனது தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. தொடர்ந்து அவருக்கும் எனக்கும் பெரும் போராட்டமே நடந்தது. பிறகு நடித்துக் காட்டினால் தந்தை ஒப்புக்கொள்வார் என்று அண்ணாமலை படத்தில் வரும் காட்சியை நடித்து அதை எங்கள் அப்பாவிற்கு போட்டு காண்பித்தேன்.
அதற்கு பிறகுதான் அவர் எனக்கு நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கினார் என்று கூறினார் விஜய். அது எந்த காட்சி என்று கூறும் பொழுது ரஜினி அண்ணாமலை திரைப்படத்தில் சரத் பாபுவுடன் சவால் விடும் காட்சி தான் அது என்று கூறியிருக்கிறார் விஜய். அந்த காட்சியை நடித்துக் காட்டிய பிறகு தான் விஜய்க்கு சினிமா வாய்ப்புகளை கொடுத்து இருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகர்.
