Tamil Cinema News
என் உடம்ப பத்தி அந்த மாதிரி.. ரசிகர்களால் கடுப்பான விஜய் டிவி பிரபலங்கள்..!
விஜய் டிவி நிறைய பேரை சினிமாவில் பிரபலமானவர்களாக மாற்றி உள்ளது. முன்பெல்லாம் சின்னத்திரையில் நடிப்பவர்கள் அவ்வளவு எளிதாக சினிமாவில் பிரபலமடைந்துவிட முடியாது. பல வருடங்களாக சீரியலில் நடித்தும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத பிரபலங்கள் உண்டு.
இந்த நிலை மாறியது. கொஞ்சம் கொஞ்சமாக தொலைக்காட்சி பிரபலங்களுக்கு சினிமாவில் வரவேற்புகள் கிடைக்க துவங்கியது. விஜய் டிவியில் நடிகர் சந்தானம் ஆரம்பத்தில் வாய்ப்பை பெற்று சினிமாவிற்குள் நடிக்க சென்றார்.
அவரை தொடர்ந்து சிவகார்த்திகேயனும் சினிமாவிற்கு சென்றார். அவர் இப்போது சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகனாக மாறியுள்ளார். இந்த நிலையில் பலரும் சிவகார்த்திகேயனை போலவே சினிமாவில் கால் பதிக்க ஆசைப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஜோடி நம்பர் 1 மூலமாக விஜய் டிவியில் பிரபலமானவர்கள் அபிநயா மற்றும் அஞ்சனா. இவர்கள் இருவருக்குமே நல்ல வரவேற்பு இருந்து வந்தது. ஆனால் இப்போது சமூக வலைத்தளங்களில் அவர்கள் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகின்றனர்.
இதுக்குறித்து அபிநயா ஒரு பேட்டியில் கூறும்போது ஆரம்பத்தில் எனது உடல் குறித்து மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல நான் எனது உடல் எடையை அதிகரித்தேன். அதற்கு பிறகு அவர்களே நான் அழகாக இருப்பதாக நல்லப்படியான விமர்சனத்தை கொடுத்து வந்தனர்.
