மறுமணம் செய்ய எனக்கு.. மாப்பிள்ளை யார் தெரியுமா? திவ்யதர்ஷினி ஓப்பன் அப்..!

தமிழில் உள்ள மிக பிரபலமான தொகுப்பாளினிகளில் முக்கியமானவராக திவ்யதர்ஷினி இருந்து வருகிறார். சிறு வயதாக இருக்கும்போதே இவருக்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதிக பிரபாலமானதை தொடர்ந்து அவருக்கு இசை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் தொகுத்து வழங்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் சினிமா துறையில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க பலரும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் அதில் எல்லாம் நடிப்பதற்கு விருப்பமில்லை என கூறிவிட்டார் திவ்யதர்ஷினி. அப்போதே அவர் நடிப்பதற்கு ஒப்புகொண்டிருந்தால் சினிமா கதாநாயகியாக கூட ஆகியிருப்பார்.

Social Media Bar

 

 

இருந்தாலும் கூட சில படங்களில் தொடர்ந்து அவருக்கு துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை திவ்யதர்ஷினி திருமணம் செய்து சில வருடங்கள் மட்டுமே வாழ்ந்தார்.

அதற்கு பிறகு கணவரை பிரிந்துவிட்டார். இந்த நிலையில் அவருக்கு காலில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அவரால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியாமல் போனது. இந்நிலையில் அவரது இரண்டாம் திருமணம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த திவ்யதர்ஷினி இளமை காலங்களில் திருமணம் குறித்த என்னுடைய கண்ணோட்டம் வேறு மாதிரி இருந்தது. இப்போது வேறு மாதிரி இருக்கிறது. திருமணம் செய்யாமல் கூட ஒருவர் வாழலாம் என புரிந்துக்கொண்டேன்.

எனவே எனக்கு திருமணம் செய்துக்கொள்ளவே விருப்பமில்லை என கூறியுள்ளார் திவ்யதர்ஷினி.