Tamil Cinema News
கூத்தாடினா என்ன கெட்ட வார்த்தையா?.. அனல் பறந்த விஜய்யின் பேச்சு… மக்கள் ரெஸ்பான்ஸ் என்ன?
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியது முதலே அடுத்து என்ன செய்ய போகிறார் என்பதுதான் பெரும் கேள்வியாக இருந்தது. அதனை தொடர்ந்து இன்று த.வெ.க கட்சியின் மாநாடு நடந்தது.
வழக்கமாக விஜய் அரசியல் சார்ந்து பெரிதாக பேசி யாரும் பார்க்க முடியாது. எல்லா நிகழ்ச்சிகளிலும் மறைத்து மறைத்துதான் பேசி வந்தார். இந்த நிலையில் தற்சமயம் மாநாட்டில் அனல் பறக்க அவர் பேசியிருப்பது அதிக வரவேற்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ப்ளாஸ்ட் செய்த விஜய்:
அதில் பல விஷயங்களை விஜய் பேசி இருக்கிறார். விஜய் அதில் கூறும்போது எப்போதும் சினிமாகாரர்கள் என்றால் கூத்தாடி என கூறுவார்கள். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மாதிரியான பெரும் தலைவர்களையே அப்படிதான் கூறினார்கள். ஆனால் அந்த தலைவர்கள்தான் இரண்டு மாநிலத்தின் முக்கிய தலைவர்களாக மாறினார்கள்.
கூத்தாடி என்றால் என்ன கெட்ட வார்த்தையா? தமிழனின் பண்பாடு, இலக்கியத்தோடு சேர்ந்ததுதான் நாடகமும் அதன் மறு வடிவம்தான் இந்த சினிமா என கூறியுள்ளார் விஜய்.
இப்படியாக விஜய் பேசிய சாட்டையடி வசனங்கள் தற்சமயம் ட்ரெண்ட் ஆக துவங்கியுள்ளன.
